/* */

இது ' லேடீஸ் சமாச்சாரம்' தாங்க; ஆனா, ஆண்களும் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்

‘காலம் பொன் போன்றது; கடமை கண் போன்றது’ என்பது பழமொழி. மனித வாழ்க்கை காலத்தால் ஆனது. அந்த காலத்தை பொன்னாக மதிக்க வேண்டும். ஏனெனில், இழந்த காலம், வாழ்வில் திரும்ப வருவதே இல்லை. இன்றைய உலகில், தங்கத்தை விரும்பாதவர் யாருமே, இல்லை. தங்க ஆபரணங்களை வாங்கி அணிவது மட்டுமின்றி, தங்க நகை முதலீட்டிலும் இப்போது மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

HIGHLIGHTS

இது  லேடீஸ் சமாச்சாரம் தாங்க; ஆனா, ஆண்களும் கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்
X

தங்கம் வாங்க, நகைக்கடைக்கு கிளம்பறீங்களா...? அப்போ, இந்த விஷயங்களை மறந்துடாதீங்க...

இந்தியா முழுவதும், நகைக்கடைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது. நகை வாங்கும் பொழுது தங்கத்தின் தூய்மையை, கவனித்து வாங்க வேண்டும். தூய்மையற்ற தங்கம், வாங்கிய சில நாட்களில் நிறம் மங்கிவிடும். சரியான விலையில், தரமான நகைகளை தேர்வு செய்து வாங்குவது மிக முக்கியம். போலிகளை வாங்கி ஏமாறக்கூடாது.

தங்க நகைகளை வாங்கும்போது இதை கவனிங்க...

தங்கத்தின் துாய்மை:

நகைகளில், 'ஹால்மார்க்' என்பது அதில் பயன்படுத்திய தங்கத்தின் விகிதத்தை குறிக்கும்.நகையின் அடையாளமாக, 'ஹால்மார்க்' தங்கத்தில் பயன்படுத்தப்பட்ட விகிதத்தை அறிவது மிக முக்கியம். இந்தியாவில் தயாராகும் தங்க நகைகளின் தூய்மை குறித்த சான்று மற்றும் 'ஹால்மார்க்' முத்திரைகளை பிஐ எஸ் வழங்குகிறது. எனவே, பிஐஎஸ் சான்று பெற்ற தங்க நகைகளை மட்டுமே வாங்க வேண்டும்.


'ஹால்மார்க்' நகைகள், பிஐஎஸ் முத்திரையுடன், குறிப்பிட்ட எண் குறிக்கப்பட்டிருக்கும். இதில், 'ஹால்மார்க்' ஆண்டையும், நகை வாங்கும் கடை குறித்த, அடையாளத்தையும் உள்ளடக்கியது. 'கேரடேஜ்' என்பதற்காக,'கே' என்ற எழுத்தும் நகையில் இருக்கும். இது தங்கத்தின் காரட் அல்லது தங்கத்தின் தூய்மை சதவீதம் குறிக்கும். உதாரணமாக, 22 காரட் மோதிரம் வாங்கினால், அதில் 91.6 சதவீதம் சுத்தமான தங்கம் இருக்கும். இந்த கேரடேஜ் கொண்ட நகைகளில் 916 என குறிக்கப்பட்டிருக்கும். கற்கள் பதிக்கப்பட்ட ஆபரண நகைகள், ஒயிட் கோல்டு மற்றும் ரோஸ் கோல்டு நகைகள், 18 காரட் தங்கத்தில் இருக்கும்.

விலை சரிபார்த்தல்:

தங்க நகைகள் வாங்கும்போது, விலை மிக முக்கியம். தங்கத்தின் தூய்மைதான், அதன் விலையை நிர்ணயம் செய்யும். மார்க்கெட் நிலவரத்தை பொருத்து, தினமும் தங்கம் விலை உயரவும், குறையவும் செய்கிறது.

செய்கூலி:

தங்க நகைகள் வாங்கும்போது, நகை கடைகளில் செய்கூலி என, நகை விலையுடன் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நகைகளை தயாரிக்கும் தொழிலாளர் கூலி, அந்த செலவு நகைக்கடையில் நகை வாங்குவோர் கணக்கில் சேர்க்கப்படுகிறது. இது, அன்றைய தங்கம் விலையின் சதவீதம் பொருத்து மாறுபடும். எனவே, பேரம் பேசி விலையை குறைக்கலாம்.


இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்:

நகைக்கடையில் நகை வாங்கும்போது, அதற்கான ரசீது கட்டாயம் வாங்க வேண்டும்.

ஒரு கடையில் வாங்கிய நகையை, மற்றொரு கடையில் விற்றால் சரியான விலை கிடைக்காது; வாங்கிய கடையிலேயே நகைகளை விற்க வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்ய, கற்கள் பதித்த நகைகளை தவிர்த்து முற்றிலும் தங்கத்தால் ஆன நகைகளை வாங்க வேண்டும்.

பிரபலமான நகைக்கடை என்பதை விட, நம்பிக்கையான கடையாக இருப்பது மிக முக்கியம்.

ஜவுளிக்கடைகளுக்கு புத்தாடைகள் எடுக்க சென்றால், ஆடைகளை தேர்ந்தெடுக்க மணிக்கணக்கில் பெண்கள் நேரத்தை வீணாக்குவது வழக்கம். பல மணி நேரத்தை செலவழிக்கும் பெண்களால், ஆண்கள் ஜவுளிக்கடைகளுக்கு சென்றால், நொந்து போவது எப்போதுமே வாடிக்கைதான்.

ஆனால், நகைக்கடைகளுக்கு சென்றால், தங்க நகைகள் மீதான அதீத ஆர்வத்தில், பெண்கள் நகைகளின் துாய்மை, தரம், விலை குறித்து போதிய கவனம் காட்டுவது குறையலாம். எனவே, பர்ஸ்சை பாதுகாத்துக்கொள்ள, ஆண்கள், நகைக்கடைகளுக்கு மனைவியுடன் சென்றால், நகைகளை பற்றிய இந்த விஷயங்களில் தீவிர கவனம் செலுத்துங்கள். இல்லையெனில், நகை வாங்கிய பின்பு, நகைக்கடைகளில் தரப்படும் காலி பர்ஸ்களுக்கு முன்பே, உங்களிடம் இருக்கும் பர்ஸ்கள் 'காலி' ஆகிவிடும்.

Updated On: 5 Oct 2022 2:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. லைஃப்ஸ்டைல்
    சிவபெருமான் பற்றிய மேற்கோள்கள் மற்றும் விளக்கங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைப்பழ தோலில் இவ்ளோ நன்மைகளா..? தோலை இனிமே வீசமாட்டோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒன்றாக இருப்பதன் சக்தி: திருமணம் பற்றிய மேற்கோள்கள்
  7. தொழில்நுட்பம்
    அமேசானின் கோடை விருந்து: மே 2ல் மாபெரும் சலுகை!
  8. வீடியோ
    குஜராத்தில் பிடிபட்ட போதை பொருள் | H Raja பரப்பரப்பு பேட்டி |#hraja...
  9. ஈரோடு
    அந்தியூரில் நீர்மோர் பந்தலை திறந்து வைத்த எம்.எல்.ஏ. வெங்கடாஜலம்
  10. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...