வாழ்க்கைக்கு தேவையான சிறந்த தமிழ் பொன்மொழிகள்

வாழ்க்கைக்கு தேவையான சிறந்த தமிழ் பொன்மொழிகள்
X

தமிழ் பொன்மொழிகள் 

Best Quotes in Tamil-உங்கள் வாழ்க்கையை மேம்படுத்த சிறந்த ஊக்குவிப்பை அளிக்கும் மிகச் சிறந்த தமிழ் பொன்மொழிகளை தொகுத்து வழங்கியுள்ளோம்

Best quotes in Tamil உங்கள் வாழ்க்கையை ஒளிமயமாக்கவும், இலட்சியத்தை விரைவில் அடையவும் உங்களுக்கு ஊக்கமளிக்க தத்துவங்கள், நற்சிந்தனைகள் மற்றும் பொன்மொழிகளை இந்த பதிவில் அளித்துள்ளோம்.

உலகில் செயல்களைச் செய்து காட்டுபவர் சிலர். செய்துகாட்டும் செயல்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர் பலர். என்ன செயல் நடைபெறுகிறது என்று அறியாமலேயே இருப்பவர் அநேகர்.

நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்.

தகுதி உடையது தப்பிப் பிழைக்கும்.

நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.

வாழ்க்கைப் பாதையை மலர்களால் தூவ முடியாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் சிரிப்புக்களை தூவுங்கள்

கெட்ட மனிதர்கள் எவரும் இல்லாவிடின் நல்ல வழக்கறிஞர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்

பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்


அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும். நாம் செய்யும் தவறுகள் அதற்குரிய செலவுகள்.

தன் பிள்ளைகளுக்கு, பிறர் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுப்பதன் மூலம் தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.

மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.

கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாத வரை.

ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.

கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப்பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நிம்மதியாகக் குளித்து விட்டு வா.

வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.


ஒரு நூலகத்தையும், ஒரு தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவருக்கு வேறெதுவும் தேவையில்லை


செய்ய முடிந்தவன் சாதிக்கிறான். செய்ய முடியாதவன் அடுத்தவர்களுக்கு போதிக்கிறான்.


ஒரு கதவு மூடப்படும் போது இன்னொரு கதவு திறக்கிறது. ஆனால் பல நேரங்களில் நாம் மூடிய கதவின் நினைவிலேயே இருப்பதனால், திறந்த கதவுகள் நம் கண்களுக்கு தெரிவதில்லை.


தன்னம்பிக்கை கொண்டவர்கள் ஒவ்வொரு பிரச்சனையிலும் உள்ள வாய்ப்பை பார்க்கின்றார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள பிரச்சனையை பார்க்கிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story