கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தூக்கிட்டு தற்ககொலை

சேலம் மாவட்டம் சின்னசீரகாபாடியை சேர்ந்த உதயகுமார் (வயது 40) கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரது மனைவி விஜயலட்சுமி (வயது 36), கணவரின் மரணத்தால் மிகுந்த மனவேதனையில் ஆழ்ந்த நிலையில் இருந்து வந்தார். இருவருக்கும் 17 மற்றும் 15 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கணவரின் திடீர் மரணம் காரணமாக ஏற்பட்ட மனமுடைப்பு, விஜயலட்சுமியின் வாழ்க்கையை பெரிதும் பாதித்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஜயலட்சுமி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பக்கத்து வீட்டாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சம்பவத்தறிவறிந்த ஆட்டையாம்பட்டி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை சாலை விபத்தில் உயிரிழந்ததற்குப் பின் சில நாட்களில் தாயும் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த இரு சிறுமிகள், பெற்றோர் இருவரையும் இழந்து கடும் மனவேதனையில் தவிக்கின்றனர். இந்த சோகமிகு நிகழ்வு, சின்னசீரகாபாடி பகுதியை ஒரு பரவலான சுமையில் ஆழ்த்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu