கோபி நகராட்சி வரிவசூலில் 93% சாதனை

கோபி நகராட்சி வரிவசூலில் சாதனை:
கோபி நகராட்சி எல்லைக்குட்பட்ட 30 வார்டுகளில் 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வீட்டுவரி, தொழில்வரி, குடிநீர் வரி மற்றும் கடை வாடகை போன்ற தலைப்புகளில் வரிகள் வசூலிக்கப்படுகின்றன.
2024-25 நிதியாண்டிற்கான வரிவசூலில், நகராட்சி முக்கிய முன்னேற்றத்தை கண்டுள்ளது. மொத்த இலக்கு ரூ.17.71 கோடி என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 93 சதவீதமான ரூ.14.37 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வீட்டுவரி இலக்கு ரூ.10.26 கோடியில் ரூ.8.79 கோடி வசூலாகி 95% சாதனை.
குடிநீர் வரி ரூ.1.79 கோடி இலக்கில் ரூ.1.61 கோடி வசூலாகி 92%.
தொழில்வரி ரூ.63 லட்சம் முழுமையாக வசூலாகி 100% வெற்றி!
கடை வாடகை ரூ.2.07 கோடி வசூலாகி முழுமையான வசூல்.
அனைத்து வரி தலைப்புகளிலும் நகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு செயல்பட்டதின் விளைவாக, பொதுமக்களிடையே நம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்த வெற்றி எதிர்கால மேம்பாட்டு திட்டங்களுக்கு வலு சேர்க்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu