Anbu Kavithai-அன்பிற்கு இல்லை அடைக்கும்தாழ்..!
![Anbu Kavithai-அன்பிற்கு இல்லை அடைக்கும்தாழ்..! Anbu Kavithai-அன்பிற்கு இல்லை அடைக்கும்தாழ்..!](https://www.nativenews.in/h-upload/2023/12/23/1836795-anbu.webp)
anbu kavithai-அன்பு கவிதைகள் (கோப்பு படம்)
Anbu Kavithai
பிறர் மகிழ்ச்சியாக இருக்க விரும்புவதும், அதற்கான காரணங்களாக கட்டமைப்பது அன்பு மட்டுமே. புரிதலின் அடிப்படையில் அனைவருமே சம அளவில் இதனை விரும்புகின்றனர். இது உலகளாவியது மற்றும் நிபந்தனைகளற்றது. அன்பு நிபந்தனைகளை விதிக்காது. மற்றவர்களின் தேவைகளை உணர்ந்து கொள்ளும் பண்புகள் மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்கு பங்களிக்கும் விருப்பம் ஆகியவையும் இதில் அடங்கும்.
நம்முடைய உறவினராக இல்லாவிட்டாலும் அல்லது அவர்கள் நமக்கு என்ன செய்திருந்தாலும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் எல்லோருக்கும் சம அளவில் அன்பினை கொடுக்க வேண்டும்.
இதோ அன்புக்கான கவிதை
Anbu Kavithai
மனித வாழ்வில் ஏற்ற இறக்கங்கள்
நடப்பது வாடிக்கை தான்..
இதை தீர்மானிப்பது அன்பு என்ற
மந்திரம் மட்டுமே.!
இனம், மொழி அறியாது அன்பு.
சிறு புல்லில் கூட பூக்கலாம்..
பெரும் கல்லில் கூட பூக்கலாம்..
எங்கு வேண்டுமானாலும் அன்பு..!
பூமிக்கு அழகு பூக்கள் மட்டுமல்ல..
அன்பு மட்டும் இல்லை என்றால்
என்றோ அழிந்திருக்கும் இந்த பூமி.
அன்பு ஒளிரும் இடத்தில்
கடவுளை பார்க்கலாம்..
கடவுள் உன் உருவிலும் தெரியலாம்..
நீ அன்பு செய்தால்.!
Anbu Kavithai
இருக்கும் போது தொல்லையாக
தெரிந்த என் அன்பு தான்..
நான் இல்லாத போது நீ உணர்வாய்..
உன் வாழ்வில் உனக்கு கிடைத்த
மிகச் சிறந்த ஆறுதலான
உண்மையான அன்பு
அதுவாக தான் இருக்கும்..!
உண்மையான அன்பு
ஒரு போதும் எவரையும் ஏமாற்றாது..
அதை பெற்று கொண்டவர்கள் தான்
ஏமாற்றுகிறார்கள்.
இவ்வளவு அன்பு வைக்கும் அளவிற்கு
நம்மிடம் என்ன இருக்கிறது என்று
யோசிக்க வைக்கிற ஒருத்தரை
வாழ்க்கையில சந்திச்சு இருந்தா..
உண்மையாகவே நீங்கள்
அதிஷ்டசாலிதான்.!
Anbu Kavithai
ஒருத்தவங்க மேல அன்பு வைத்து
அசிங்கப்படுவதை விட..
அவர்கள் தேடினாலும் கிடைக்காத
மாதிரி விலகி விடனும்..
அப்போதுதான் நம்மளோட மதிப்பு
அவர்களுக்கு தெரியும்.
அன்பு மட்டும் தான்
உலகில் நிலையானது..
அதை உண்மையாக்குவதும்
பொய்யாக்குவதும் நாம்
நேசிப்பவரிடம் மட்டுமே உள்ளது.
அன்பான உறவுகள்
மின் மினி பூச்சி போன்று என்றும்
இதயத்தில் மின்னிக்கொண்டு இருக்கும்.
நிலையாக ஒருவரிடம் கிடைக்கும்
அதிகமான அன்பு என்றுமே
திகட்டும்.
நெடுநாள் எதிர்பாத்திருந்த
ஒருவரின் அன்பு கிடைக்கும் போது
அளவற்ற இன்பத்தை வாரி
வழங்குகின்றது.
Anbu Kavithai
புதிதாய் ஒருவரிடம்
கிடைக்கும் அன்பு
சுகமான
உணர்வுகளைத் தருகிறது.
நீ யாருடைய அன்பை காக்க
வைக்கிறாயோ..
அவரின் உண்மையான அன்பு
உன்னை தேடி வருகின்றது.
நீ யாருடைய அன்புக்கு காத்திருக்கிறாயோ
அவரின் அன்பு உன்னை என்றும்
காக்க வைக்கிறது.
பிரிவுகள் நிரந்தரம் அல்ல..
இமைகளில் பிறந்த உறவுகள்
இதயத்தில் இருக்கும் வரை..!
கல்லறை கூட அழகாகத் தெரியும்
உண்மையான அன்பு அங்கு
உறங்கும் போது..
உன் அன்பில் உறங்க ஆசை
விடியும் வரை அல்ல..
உயிர் பிரியும் வரை.!
Anbu Kavithai
எவ்வளவு தான் அன்பை
மரணிக்க செய்தாலும்..
அது மீண்டும் மீண்டும்
உயிர் பெற்று விடும்.
உண்மையான அன்பு எப்போதும்
அதிகமாக நேசிக்குமே தவிர..
என்றும் மறையாது.
இன்பமாய் இசை பாடுவதும்
அன்பு தான்..
ஐயம் இல்லாமல் வாழ்வதும்
அன்பில் தான்.
அன்போடு இணைந்து
வாழும் வாழ்வு..
மலர் தோட்டம் போல்
காற்றில் நறுமணம் வீசும்.
வாழ்வின் அடிப்படையே
அன்பில் தான் அடக்கம்.
Anbu Kavithai
உன் இதயத்தில் அன்பு
பரவசம் அடைந்தால்..
அனைத்து உயிரும் உன்னால்
பரவசம் அடையும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu