Adhatoda Leaf Uses In Tamil ஆடா தொடை இலையினால் நமக்கு தீரும் நோய்கள் என்னென்ன?....படிங்க...
Adhatoda Leaf Uses In Tamil
நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்த மூலிகைகளுள் ஆடாதொடையும் ஒன்று.ஆடாதொடை தென்இந்தியா மற்றும் வங்காள தேசம் ஆகிய இடங்களில் பயிர்செய்யப்படுகிறது. இச்செடியின் இலை, மற்றும் பூ, பட்டை, வேர் ஆகியவை மருத்துவத்தில் நன்றாக பயன்படுத்தப்படுகின்றன.
ஆடா தொடையினால் நமக்கு ஏற்படக்கூடிய பல்வேறு நோய்கள்தீருகின்றன. ஜீரம், சளி, இருமல், ஜலதோஷம், மூச்சுத்திணறல், இரைப்பு, ஈஸ்னோபீலியா, மூக்கடைப்பு, நீர்ஒழுகுதல், கபம்,மூச்சு வாங்குதல், ஆஸ்துமா, பிரசவ சிக்கல், கபஜீரம், விஷம், கக்குவான், இருமல், ரத்தக்கொதிப்பு, காமாலை,குடைச்சல், வாத பித்தக்கோளாறுகள், சிலந்திக்கொடி, வயிற்றுநோய், உப்பிசம், மேல் இரைப்பு, வாந்தி, விக்கல், சூலை, அண்டவாயு, வளி-வாத தோடம், கோழைக்கட்டு, கழுத்துவலி, மலடு, ரத்த விக்கல், ரத்த இருமல், கண் சிவத்தல் , தலைவலி, ஜன்னி, அறிவுமயக்கம், மூக்கில் ரத்தம் வருதல், விஷஜீரம், பித்த ஜீரம் முதலியன.
ஆடா தொடை இலையின் பயன்கள்
ஆடாதொடை இலை, வேப்பஇலை, வில்வஇலை, ஆகிய மூன்றையும், சமஅளவில் எடுத்து அம்மியில் வைத்து சாதம் வடித்த நீரை வைத்து நன்கு அரைக்க வேண்டும். அரைத்த விழுதை, எடுத்து சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாகச் செய்து மூன்று தினங்கள் வரை வெயிலில் உலர்த்தி உலர்ந்த பின் ஒரு புட்டியில் சேமித்து வைத்துக்கொள்ளவும். காலை பகல்ஆகிய 3 வேளையும், வேளாவேளைக்கு 3 மாத்திரை வீதம் உட் கொண்டு நீர் அருந்த வேண்டும். நமக்கு ஏற்படக்கூடிய ஜீரம் நீங்கி சுகம் கிடைக்கும்.
Adhatoda Leaf Uses In Tamil
ஆடாதொடா இலை, துாதுவளை இலை, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, ஆகியவற்றை எடுத்து நன்றாக உலர்த்திய பின் அத்துடன் சுக்கு மிளகு, திப்பிலி, வகைக்கு 20கிராம் எடுத்து சேர்த்து உரலில் நன்றாக இடித்து துாளை மெல்லிய துணியில் போட்டு நன்றாக சலித்து புட்டியில் போட்டு வைத்துக்கொள்ளவும். இரண்டு சிட்டிகை துாள் எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டால் கபஜீரம், இருமல், இரைப்பு, சளிக்கட்டு ஆகியவை நீங்கும்.
கக்குவான்இருமல் நீங்க
ஆடாதொடை , கண்டங்கத்தரி, துாதுவளை, துளசி, ஆகிய நான்கு மூலிகைகளும், இருமலைப்போக்கும் சக்தி வாய்ந்தவை. இந்த நான்கு மூலிகைகளையும் ஒன்று சேர்த்து உரலில் போட்டு கொஞ்சங் கொஞ்சமாக நீர் விட்டு இடித்து அதைப் பிழிந்து சாறு எடுத்து அத்துடன் தேன் கலந்து வேலைக்கு ஒரு டீஸ்பூன் அளவு வீதம் 3வேளையும் அருந்தி வர கக்குவான் இருமலின் தொல்லை நீங்கும்.
Adhatoda Leaf Uses In Tamil
சளி, ஜலதோஷம் நீங்க
ஆடாதொடை இலையையும், வேப்ப இலையையும், சமஎடை எடுத்து சுத்தம் செய்து அம்மியில் வைத்து சாதம் வடித்த நீரை தெளித்துஅரைத்து அந்த விழுதை, மாத்திரை போல உருட்டி நிழலில் உலர்த்தி உலர்ந்த பிறகு பாட்டிலிலே போட்டு வைத்துக்கொண்டு உணவுக்கு பின்னர் வேலைக்கு 3 மாத்திரை வீதம் மூன்று வேலையும் உட்கொண்டு நீர் அருந்தினால் நாளடைவில் ஜலதோஷம் குணமாகும்.
ஈஸ்னோபீலியா நோய்க்கு
ஆடாதொடை இலை, வேப்பஇலை, அத்தி இலை, துளசி, முருங்கைக்கீரை, ஆகிய 5 விதமான இலைகளை சமஅளவில் எடுத்து, அனைத்தையும் ஒன்றாக அம்மியில் வைத்து சாதம் வடித்த நீரை ஊற்றி நன்கு அரைத்து அந்த விழுதை எடுத்து சுண்டைக்காய் அளவில் மாத்திரைகளாக உருட்டி, 3 தினங்கள் நன்றாக வெயிலில் உலர்த்தி பின்னர் இம் மாத்திரைகளைப் புட்டியில் போட்டு சேமித்து வைத்துக்கொண்டு வேளைக்கு 3 மாத்திரை வீதம் அதாவது, காலை 3 , பகல் 3, இரவு 3 மாத்திரைகளை உணவுண்ட பின்னர் வாயில் போட்டு விழுங்கி கொஞ்சம் நீர் அருந்த வேண்டும். இவ்வாறு 30 நாட்கள் அருந்தினால் ஈஸ்னோபீலியாவை ஒழித்து விடலாம்.
Adhatoda Leaf Uses In Tamil
ஆஸ்துமா மன நோய் குணமாக
ஆடாதொடையின் பச்சை வேரை, சுமார் ஒரு கிலோ அளவு எடுத்து மரக்கட்டையால் தட்டி, வேரின் உள்ளே குச்சியை நீக்கிவிட்டு, வேரின் பட்டையை மட்டும் நிழலில் உலர்த்தி ஒன்றிரண்டாக இடித்து ஒரு மண்பாண்டத்தில் போட்டு 50 கிராம் மிளகையும் போட்டு இளம் வறுவலாக வறுத்து எடுத்து நன்றாக இடித்து மெல்லிய துணியில் போட்டு வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.பிறகு துாளின் எடைக்கு இரட்டிப்பாக தேனை ஊற்றி கிளறி சேமித்து வைத்துகொண்டு காலை உணவுக்கு முன் ஒரு தேக்கரண்டியளவு மருந்தை சாப்பிட்டு வெந்நீர் அருந்தவும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu