காளான் சாப்பிட்டாலே உடம்புல என்னென்ன மாற்றம் நிகழும் தெரியுமா....?
காளான் - ஆரோக்கியத்தின் கருவூலம்
காளான் அறிமுகம் | Mushroom Benefits In Tamil
காளான் என்பது மண்ணின் மீது வளரும் ஒரு பூஞ்சைத் தாவர உயிரினம் ஆகும். பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவான காளான் பல தரப்பட்ட சூழல்களிலும் வளரக் கூடியது. இயற்கையாக வளரும் காளான்களை பிடுங்கிப் பயன்படுத்துகின்றனர். பல நாடுகளில் காளான் முறையாகப் பயிர் செய்து உற்பத்தி செய்யப்படுகிறது.
காளானின் பயன்பாடுகள்
காளான் மசாலாகவும், குழம்பாகவும், பிரியாணியாகவும், சில்லியாவும் மக்கள் விரும்பி சாப்பிடுகிறன்றனர். ஆனால் அதை நன்கு சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்.
காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
🎯 காளான்களில் குறைவான காலோரி மற்றும் கொழுப்பு உள்ளதால் உடல் எடையை குறைக்க சிறந்த உணவாக இருக்கிறது.
💧 காளான்கள் அதிக நீர்ச்சத்து உள்ளடக்கத்துடன் இருப்பதால், உடல் நீர் சரியாக இருக்க உதவுகிறது.
🍄 காளான்கள் வைட்டமின்கள் (B, D போன்றவை), மினரல்கள் (சிங்க், செலினியம்) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.
🧠 வைட்டமின்கள் மற்றும் செலினியம் உடலில் நரம்புகளின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
❤️ காளான்கள் குறைவான கொழுப்பு மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
🛡️ காளான்கள் ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடண்ட் வளமாக இருப்பதால், உடலில் செல்களின் சேதங்களைத் தடுக்க உதவுகின்றன.
📊 காளான்கள் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் கொண்டதால் அது குருதியின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu