சியாச்சின் போர்க்களத்தில் சூடான உணவுகள் எப்படி?
உலகிலேயே மிகவும் உயரமான போர்க்களம் இந்தியாவின் சியாச்சின் பனிமலைகள் தான். கடல் மட்டத்தில் இருந்து 20 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இங்கு வெப்பநிலை மைனஸ் 60 டிகிரியை தாண்டி கீழே செல்லும். இங்கு வெப்பநிலையை துல்லியமாக அளக்கவும் முடியாது. காரணம், இங்கு வெப்பநிலையை அளக்க செய்யும் வெப்ப, குளிர்மானிகள் அத்தனையும் செயலிழந்து விடும். அந்த அளவு குளிர்ச்சி நிறைந்த இடம் தான் சியாச்சின்.
இந்திய ராணுவம் இங்கு தங்கியிருந்து தான் தன் நாட்டு எல்லையை பாதுகாத்து வருகிறது. ஆனால் இவர்களுக்கு மூன்று வேளையும் இந்தியா சூடான உணவுப்பொருட்களை வழங்கி வருகிறது. இட்லி, சப்பாத்தி, சாதம், பிரியாணி, லெக்பீஸ்கள், சிக்கன், மட்டன் என எந்த உணவு வழங்கினாலும் இந்தியா தன் வீரர்களுக்கு சூடாக வழங்கி வருகிறது.
இந்த அதிசயம் தான் உலக நாடுகளை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. இது குறித்து டிஆர்டிஏ விஞ்ஞானிகள் கூறும் போது, இந்திய ராணுவ ஆராய்ச்சி மையம் தனது அறிவியல் கண்டுபிடிப்பாலும், புதிய தொழில்நுட்பத்தாலும், இந்த சாதனை செய்துள்ளது. பதப்படுத்தப்பட்ட, பேக்கிங் செய்யப்பட்ட உணவுகள் தான் சியாச்சின் மலைப்பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு கொண்டு செல்லப்படும் போது, அந்த உணவுகள் உறைநிலையில் தான் இருக்கும். இதனையும் தாண்டி உணவுப்பொருட்களை பேக்கிங் செய்யும் முறைகள் மூலம் புதிய பல அறியவியல் தொழில் நுட்பங்களை உருவாக்கி உள்ளோம். இந்த பாக்கெட்டுகளை பிரிக்கும் போதே, உள்ளே இருக்கும் உணவுகள் சூடாகும். அந்த அளவு பாக்கெட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உணவுகளை சூடாக்கும் தொழில் நுட்பத்திற்காக பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்கள் உணவின் தரத்தையும் கெடுத்து விடக்கூடாது. ராணுவவீரர்களின் உடல்நலத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர். இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூடான உணவுகளை டோக்லாம், லாடாக்கில் பனிமலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் இந்திய வீரர்களுக்கும் இதே பாணியில் தான் தரமான, சூடான உணவுகள் வழங்கப்படுகின்றன. நம்மை பாதுகாக்க எல்லையில் அதிபயங்கர உறைபனியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu