ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு தீபாவளி வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

ஜனாதிபதி திரவுபதி முர்முவிற்கு பிரதமர் மோடி பூங்கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை இன்று சந்தித்த பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து கூறினார்.

ஜனாதிபதி திரவுபதி முர்முவை பிரதமர் மோடி இன்று சந்தித்து தீபாவளி வாழ்த்து கூறினார். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இன்று தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே, பிரதமர் மோடி ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை எல்லை பாதுகாப்புப்படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

2014 இல் அவர் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, ஆயுதப் படைகளுடன் தீபத் திருவிழாவைக் கழிப்பதையும், அவர்களின் தியாகங்களுக்கு நன்றி தெரிவிக்க தொலைதூர இடங்களுக்குச் செல்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கிலில் ராணுவ வீரர்களுடன் தீபத் திருவிழாவை கொண்டாடினார்

அதேவேளை, 2019ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் ரஜோரியில் எல்லை பாதுகாப்புப்படையினருடன் பிரதமர் மோடி தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடி தனது பாரம்பரியத்தை கடைபிடித்து இந்த ஆண்டு தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதற்காக சீன எல்லையை ஒட்டியுள்ள இமாச்சல பிரதேசத்தில் உள்ள லெப்சாவுக்கு சென்றுள்ளார்.

இந்த ஆண்டு இமாச்சலபிரதேசத்தில் சீனாவுடனான எல்லை பகுதியில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுடன் பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

அதன் பின்னர் டெல்லிக்கு திரும்பிய பிரதமர் மோடி ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். துணை ஜனாதிபதி ஜெகதீன் தன்கரும் சந்தித்து பேசினார். மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், ஸ்மிரிதி ராணியும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்கள்.

முன்னதாக இன்று காலை நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story