முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகள்

முக்கிய நகரங்களில் விற்பனையாகாத வீடுகள்
X
இந்தியாவின் பெரிய நகரங்களில் கட்டப்பட்டு விற்பனையாகாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கடந்த 2019-லிருந்து இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில் விற்பனை செய்யப்படாமல் நிறுவனங்களிடம் இருப்பாக உள்ள வீடுகளின் எண்ணிக்கை 24 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ஜேஎல்எல் இந்தியா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, புனே, ஹைதராபாத் ஆகிய 7 நகரங்களில் விற்பனையாகாமல் மனை-வணிக நிறுவனங்களின் கைவைசம் உள்ள வீடுகளின் எண்ணிக்கை 4,68,000-ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை 2019 டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் 24 சதவீதம் அதிகம். வீடு கட்டுவதற்கான நிலம் மற்றும் கட்டப்பட்ட வீடுகளின் விற்பனை மிகவும் மந்த நிலைக்கு வந்து விட்டது.

மாறாக நிலம் பரிவர்த்தனை தொடர்பான விஷயங்கள் தீவிரமாக இருந்து வருகிறது. ஒருவர் பெயரில் இருந்து மற்றவர் பெயருக்கு மாற்றுவது, அதேபோல் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும் என மக்கள் நம்பும் இடங்களில் முதலீடு செய்வதும் அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. வளர்ச்சியடையாது என மக்கள் நம்பும் பகுதிகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதன் மூலம் நிலத்தில், வீடுகளில் செய்யப்படும் முதலீடும் வளர வேண்டும் என்ற விருப்பம் மக்களிடம் உள்ளது தெளிவாக தெரிகிறது.

Tags

Next Story
ஓட்டு அரசியலுக்கு இலவசங்கள் எனில் கடும் எதிர்ப்பு - பா.ஜ. அண்ணாமலை வெளியிட்ட பளிச் எச்சரிக்கை..!