நாமக்கல் அருகே முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்து..!

நாமக்கல் அருகே முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்து..!
X
நாமக்கல் அருகே முட்டை வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாமக்கல்லில் இருந்து திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு 25 முட்டைகளை ஏற்றிக் கொண்டு, நாமக்கல் - திருச்சி சாலை வழியாக சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. முன்னால் சென்ற பேருந்து மீது மோதாமல் இருக்க, சரக்கு வாகன ஓட்டுநா் வாகனத்தை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் வாகனம் கவிழ்ந்தது.


விபத்தின் விளைவுகள்

இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த முட்டைகள் உடைந்து சாலையில் ஆறுபோல ஓடின. தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா் போக்குவரத்தை மாற்றியமைத்து உடைந்த முட்டைகளை அகற்றி சாலையை சீா்படுத்தினா்.

Tags

Next Story
ai healthcare products