2024ல் ஆந்திராவில் வெற்றி யாருக்கு?
2024ல் ஆந்திராவில் வெற்றி யாருக்கு? (மாதிரி படம்)
ஆந்திர மாநிலத்தில் தேர்தல் இந்த முறை கடும் போட்டியாகவே இருந்து வருகிறது. பல இடங்களில் ஒரு சில நுாறு ஓட்டுகளில் நீயா, நானா என வேட்பாளர்கள் முந்தும் நிலை தான் காணப்படுகிறது. ஆனால் பொது விஷயங்களின் அடிப்படையில் NDA கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஆளும் கட்சிக்கு பெரிய சரிவு ஏற்படாது. ஆனால் என்.டி.ஏ கூட்டணிக்கு நிச்சயம் பெரும்பான்மை கிடைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். விசாகப்பட்டினம், கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர் ஆகிய 5 கடலோர மாவட்டங்களில் மட்டும் 80 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
இங்கு தான் டிடிபி+கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை YSRCP இங்கு பல இடங்களை வென்றது. முக்கியமாக தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா இடையே வாக்குகள் பிரிந்ததால் ஜெகன்மோகன் ரெட்டி எளிதில் வெற்றி பெற்றார். இப்போது இருவரும் ஒன்றாக இருப்பதால், ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடும் சிக்கல் உருவாகி உள்ளது. தவிர கடந்த ஐந்து ஆண்டில் ஜெகன்மோகன்ரெட்டி எதுவும் செய்யவில்லை என்ற கடும் புகாரும் இருந்து வருகிறது. அதுவும் அவருக்கு பின்னடைவாகவே இருக்கும்.
இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும், பழங்குடியினப் பகுதிகளான மான்யம், ராயலசீமா, நெல்லூர் ஆகியவற்றில் ஒய்எஸ்ஆர்சிபி இன்னும் வலுவாகவே உள்ளது. மேலும் சிறுபான்மையினர், எஸ்சி, எஸ்டியினர் ஆதரவும் உள்ளது. மேலும் கிராமப்புறங்களில் கட்சி மிகவும் வலுவாக உள்ளது.
அதேபோல் 40 இடங்களைக் கொண்ட பிரகாசம், அனந்தப்பூர் மற்றும் சித்தூர் ஆகிய 3 முக்கிய மாவட்டங்களில் TDP, YSRCP இரண்டுக்கும் கடும் போட்டி நிலவுகின்றன.
இந்த தொகுதிகளில் தேர்தல் முடிவுகள் பெரும் இழுபறியாகவே இருக்கும். இங்கு ஒரு உண்மையான அரசியல் போரையே ஓட்டு எண்ணிக்கை அன்று எதிர்பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu