கொரோனா 4-வது அலை உருவாக வாய்ப்பில்லை: கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் தகவல்
கொரோனா பரவல் இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி இருக்கிறது. டெல்லி, உத்தரபிரதேசம், அரியானா, கேரளா ஆகிய மாநிலங்களில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் கொரோனா பரவி 4-வது அலை வந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஆனால் 4-வது அலை வர வாய்ப்பில்லை என்று கான்பூர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணீந்தர அகர்வால் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரிக்க வாய்ப்பில்லை. பல மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. இதன்காரணமாக நாடு முழுவதும் இயல்பு நிலை திரும்பி இருக்கிறது.
கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் மக்கள் சற்று கவனக்குறைவாக இருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் முககவசம் அணிவதில்லை.கொரோனா தற்போது அதிகரித்து இருப்பதற்கு இது தான் முக்கிய காரணம் ஆகும்.
நாடுமுழுவதும் மக்களிடம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இருக்கிறது. 90 சதவீத பேரிடம் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது. எனவே கொரோனா எத்தகைய வடிவத்துடன் உருமாற்றம் பெற்று வந்தாலும் அதிகளவு பரவ வாய்ப்பில்லை.
பல நாடுகளில் கொரோனா அதிகரித்துள்ளது. ஆனால் அதிகரித்த வேகத்திலேயே இறங்கியும் விட்டது. இந்தியாவிலும் அத்தகைய நிலை ஏற்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu