ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை- நிறுவனங்களுக்கு அறிவுரை
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், ஓட்டுப்பதிவு நாளான நாளை தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிப்பது தொடர்பாக, தொழிலாளர் நலத்துறை சார்பில் கூட்டம் நடந்தது.
மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ஜெயலட்சுமி பேச்சு
ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமை வகித்து பேசினார். இடைத்தேர்தலில், 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய ஏதுவாக, வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்யும் வகையில், அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும்.
நிறுவனங்கள் மீதான புகாரை தெரிவிக்க வழிவகை
தவறும் பட்சத்தில், நிறுவனங்கள் மீதான புகாரை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கலாம் என்றார்.உதவி ஆணையர் ஜெயலட்சுமி - 94453 98751, தொழிலாளர் துணை ஆய்வாளர்- 2-ம் சரகம் மயில்வாகன் -98404 56912, உதவி ஆய்வாளர் 2-ம் சரகம் பேரோஸ் அகமது - 99656 34839, அலுவலகத்தை, 0424 2270090 என்ற எண்களில் புகாராக தெரிவிக்கலாம், என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu