அறிவுக் கூர்மைக்கான அருமையான விளையாட்டு..... விடுகதை....படிங்க....

அறிவுக் கூர்மைக்கான அருமையான  விளையாட்டு..... விடுகதை....படிங்க....
X
tamil vidukathaikal நம்முடைய மூளையைப் புத்துணர்ச்சியோடு இருக்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டதே இதுபோன்ற விடுகதைகள் , புதிர்போட்டி, குறுக்கெழுத்துப்போட்டி போன்றவை.

tamil vidukathaikal


tamil vidukathaikal

மனிதர்களின் அறிவினைச் சோதிக்க அக்காலம் முதல் இக்காலம் வரை பல போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் நேரிடையான போட்டிகளாகவும் திருவிழாக்காலங்களில் ஒவ்வொரு ஊரிலும் நடத்தப்படுவது வழக்கம்.

இதுமட்டும்அல்லாமல் பத்திரிகைகள், நாளிதழ்களில் இது சம்பந்தமான போட்டிகள் வாரந்தோறும் நடத்தப்படுகிறது. நம்முடைய அறிவினைச் சோதிக்கும் வகையில் விடுகதைகள், புதிர் போட்டிகள், குறுக்கெழுத்துப்போட்டிகள், இரண்டுக்கும் வித்தியாசம், அல்லது ஒரு கேள்வி கேட்டு அதற்கான பதில். ஒரு கேள்வி கேட்டு அந்த விடையில் ஒருசில எழுத்துகள் மிஸ்ஸிங்... அதனைக் கண்டுபிடித்தல் என பல போட்டிகள் பத்திரிகைகளில் வெளிவருகிறது. வாசகர்கள் இதனை எழுதி அதற்குள்ள கூப்பனோடு அனுப்பினால் அவர்களுக்கு பரிசுகளும் தரப்படுகிறது.

அந்த வகையில் விடுகதையும் ஒன்று. விடுகதை என்றால் என்ன? .ஓர் இரு வரிகளில் ஒரு பொருளை மறை பொருளாக (நேரடியாக விவரிக்காமல்) விவரித்து தொடுக்கப்படும் ஒரு புதிரே விடுகதை ஆகும். இதை நொடி என்றும் பழம் தமிழில் பிசி என்றும் கூறலாம். விடுகதையைப் பொதுமக்கள் இலக்கிய வடிவமாகவும் வாய்மொழி இலக்கியமாகவும் சிலர் அடையாளப்படுத்துவர். குறிப்பாகத் "தாய்மார்கள் தம்மக்களின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் வகையில் விடுகதைகளை எழுப்புவதும், இளஞ்சிறார் அவற்றுக்குரிய விடைகளை வழங்குவதும் வழக்கமாகும்.

tamil vidukathaikal


tamil vidukathaikal

விடுகதைகளைப் பொறுத்தவரை ஒருசிலவிடுகதையில் கேள்வியிலேயே விடைகள் மறைந்து இருக்கும். அல்லது கேள்வியை சற்று யோசித்தால் உடனடியாக விடை கிடைத்துவிடும். ஒரு சில விடுகதைகளில் கொஞ்சம் மூளையைக் கசக்கினால் மட்டுமே அந்த விடுகதைக்கான விடையினை நம்மால் சொல்லமுடியும். அந்த வகையில் ஒரு சில விடுகதை உதாரணங்களைப் பார்க்கலாம்.

இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் இதுபோன்ற அறிவுக்கூர்மையான போட்டிகளில் குட்டீஸ்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.நீங்கள் கேள்வி கேட்கும்போதே பதில் சொல்லிவிடுவார்கள் சில வாண்டுகள். அந்த அளவிற்கு அவர்கள் இதில் ஈடுபாட்டோடு இருப்பார்கள். இதுபோன்ற விளையாட்டுகள் அனைத்தும் நம் மூளையை புத்துணர்ச்சி யோடு வைக்க பெரும் வழி வகுக்கிறது. எப்போது பார்த்தாலும் பாடம் பாடம் , ஆபீஸ் வேலை , தொழில் என இருப்போருக்கு இதுபோன்ற விளையாட்டுகள் ஒரு டைம் பாஸாக இருப்பதோடு மனநிறைவையும் தருகிறது. அதாவது உங்களுடைய விடை சரியாக இருந்தால் உங்களுக்கே உங்கள் மீது அபரிதமான தன்னம்பிக்கை மேலோங்குகிறது. இதேபோல்தான் குழந்தைகள், மாணவ, மாணவிகள் தேடித்தேடி விடையைக் கண்டுபிடிக்கும்போது அவர்களுடைய தன்னம்பிக்கையானது சிறக்கிறது. எனவே இதுபோன்ற விளையாட்டுகளை காலம் காலமாக நாம் விளையாடிக்கொண்டேயிருக்க வேண்டும். விளையாட்டுகளுக்கு என பல புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

tamil vidukathaikal




tamil vidukathaikal

பெரும்பாலும் வாசிப்பு திறன் அதிகம் உள்ளவர்கள் இது மாதிரியான போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். காரணம் அவர்களுக்கு பல விஷயங்கள் தெரிய வாய்ப்புள்ளது. அதனால் அவர்களுக்கு எளிதாக உள்ளது . எனவே உங்கள் குழந்தைகளையும் அன்றாடம் உலக நடப்புகள் குறித்து வாசிக்க சொல்லுங்கள் அது ஸ்மார்ட் போனாக இருந்தாலும் சரி, நாளிதழாக இருந்தாலும் சரி.

உதாரணத்துக்காக ஒரு சில விடுகதைகள்.....

உடல் உண்டு தலை இல்லைகை உண்டு விரல் இல்லைஅது என்ன? -... சட்டை

கையை வெட்டுவார்கழுத்தை வெட்டுவார்ஆனாலும் நல்லவர்அவர் யார்?.....டைலர்

சிவப்பு பைக்குள் சில்லறை கொட்டிக் கிடக்குது? அஃது என்ன?.......காய்ந்த சிவப்பு மிளகாய்

ஆயிரம் தச்சர் கூடி, அழகான மண்டபம் கட்டி, ஒருவன் கண்பட்டு, உடைந்ததாம் மண்டபம். அஃது என்ன? ...தேன்கூடு

பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அஃது என்ன?....தவளை....

எண்களுக்கான விடுகதை

"ஒரு குடந்தண்ணி ஊத்தி ஒரு பூ பூத்தது" என்று சிறுவர்கள் விளையாடும் விளையாட்டில் ஒன்று முதல் பத்து வரை எண்ணிக் கற்கும் முறை இன்றும் உள்ளது. இதில்

டா டா டா டா டா டா அது

டா டா டா டா டா டா டா டா டா டா மாட்டை

இதனை ஆறுடா, பத்துடா மாட்டை என எண்ணிச் சேர்த்து சிறுவர் விடுகதையாகப் போட்டு விளையாடுவர்

எட்டெழுத்திலுள்ள ஒரு ஊரின் பெயரைத் தெரிவிக்க கீழ்க்காணும் விடுகதை சொல்லப்படுகிறது.

ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்

மூன்றும் நான்கும் சேரில் குளம்

மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை

மூன்றும் ஆறும் சேரில் பெருமை

ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?

-எண்ணை வைத்து எழுத்தைச் சேர்த்து திரு, வாவி, வானதி, வான், குடி என இணைத்துப் பின் "திருவாவினன்குடி" என்ற விடையளிப்பர்,

பாடலாக இருக்கும் விடுகதை

சங்க காலத்து தனிப் பாடல் திரட்டில் காணப்படும், பாடல் வடிவில் உள்ள ஒரு விடுகதை. இது சுந்தரகவிராயர் என்பவரால் பாடப்பட்ட பாடல். தமிழ்நயத்துடன், மரம் என்ற சொல் மீண்டும் மீண்டும் வருமாறு அமைக்கப்பட்ட பாடல். ஆனால் இங்கே மரம் என்ற ஒரே சொல்லால், வெவ்வேறு பொருள் வரும்படி பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து

மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி,

மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது

மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்

tamil vidukathaikal


tamil vidukathaikal

மரமது - அரச மரம் (அரசு) - இங்கே அரசு என்பது அரசனைக் குறிக்கிறது.

மரத்திலேறி - மா மரம் = மா என்பது குதிரை எனப் பொருள் படுகின்றது.

மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் (வேல்)

அதாவது அரசன் குதிரையிலேறி, வேலைத் தோளில் வைத்துச் செல்கின்றான். அப்போது,

மரமது - மீண்டும் அரசு

மரத்தைக் கண்டு - வேங்கை மரம் - இங்கே வேங்கை என்பது வேங்கைப் புலியைக் குறிக்கிறது.

மரத்தினால் - மீண்டும் வேல் -

மரத்தைக் குத்தி - மீண்டும் வேங்கை

அதாவது அரசன் வேலினால் புலியைக் குத்துகின்றான். பின்னர்,

மரமது வழியே சென்று - மீண்டும் அரசு, வளமனைக்கேக்கும்போது, அதாவது அரசன் வீடு நோக்கிச் செல்லும்போது,

மரமது கண்ட மாதர் - மீண்டும் அரசு, அதாவது அரசனைக் கண்ட பெண்கள்,

மரமுடன் - ஆல் மரம்

மரமெடுத்தார் - அத்தி மரம்

அதாவது ஆல் + அத்தி = ஆலத்தி, அரசனைக் கண்ட பெண்கள் ஆலத்தி எடுத்தார்.

இப்பாடலின் பொருளை முழுமையாகக் கூறுவதாயின்:

அரசன் ஒருவன், தன் தோளிலே வேலை ஏந்தி, குதிரையில் ஏறி, வேட்டைக்குச் சென்றான். அங்கு ஒரு வேங்கைப்புலியைக் கண்டு, தன் வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தனது அரண்மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றிவீரனாகத் திரும்பிவரும் அரசனைக் கண்ட பெண்கள் அரசனுக்கு ஆலத்தி (ஆரத்தி) எடுத்து வரவேற்றனர்.இதுபோல் தமிழ் மொழியில் விடுகதைகள் பல நிலைகளில் உருவாக்கப்பட்டு வ ருகின்றன. ஒரு சிலர் இதனை புத்தகமாகவும் வெளியிட்டுள்ளனர். நாம் நேரம் கிடைக்கும்போது அருகிலுள்ள நுாலகங்களுக்கு சென்று இதுபோன்ற புத்தகத்தினை தேடி வாசித்து நம் அறிவின் கூர்மையை செழுமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.

Tags

Next Story
ஆப்பிள் பிரியர்களுக்கான  புதிய  அறிமுகம்..! பழைய விலைக்கே அப்கிரேட்டட் மேக்புக் ஏர் எம்2, எம்3 மாடல்கள்..மிஸ் பண்ணிடாதீங்க!..