செல்வத்துள் உயர்ந்தது குழந்தை செல்வம் குழந்தைகள் தின வாழ்த்துகள்....படியுங்க....
Happy Childrens Day 2022 wishes in tamil
Happy Childrens Day 2022 wishes in tamil
மனிதர்களுடைய வாழ்க்கையில் முக்கியமான நாள் திருமண நாள். அந்த திருமணம் எதற்காக செய்கிறோம்?-தெரியுமா? ஆண், பெண், துணைக்கா? எதற்காகவே என்று இன்று வரை பலருக்கும் தெரியாது. ஆம்.. அதுதான் உண்மை.. எல்லோரும் செய்கிறார்கள் அதனால் நானும் திருமணம் செய்துகொண்டுள்ளேன் என்றுதான் பலரும் தெரிவிப்பார்கள்.
காரணம் அவர்களுக்கு எந்தவொரு விஷயத்திலும் ஆழ்ந்து சிந்திக்க நேரம் இல்லை என்பதே உண்மை. பாதி நேரத்தினை ஆபீஸ் விழுங்கிவிடுகிறது.மீதி நேரத்தினை ஸ்மார்ட்போன் விழுங்கிவிடுகிறது. இதுதாங்க இன்றைய வாழ்க்கை... விடிந்தால் ஆபீ்ஸ்... வீட்டுக்கு வந்தால் ஸ்மார்ட்போன்... மனைவி கூட அப்புறந்தான்னு வைச்சுக்கங்களேன்...அப்படியாகிவிட்டது இப்போதைய நிலைமை...என்னத்தைச் சொல்ல?
Happy Childrens Day 2022 wishes in tamil
Happy Childrens Day 2022 wishes in tamil
கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிரு...என்று சொல்வதை நீங்கள் அனைவருமே கேள்விப்பட்டிருப்பீர்கள்.. அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? ...கல்யாணம் செஞ்சுக்கிட்டா ஆயிரம் வருஷம் வாழலாமா? ...பின்ன என்னங்க? அப்படியில்லைங்க...
ஒரு திருமணம் நடந்தால் அந்த சந்ததியானது விருத்தியாகி ஆயிரம் வருஷம் வரை நீடிக்கும்...என்பதுதான் அதன் பொருள்....என வைத்துக்கொள்ளுங்களேன்... இப்ப தெரியுதா? எதற்காக கல்யாணம் செய்துக்கிறோம்னு...
திருமணம் என்றாலே அடுத்த ஒரு மாதத்தில் என்னம்மா? விசேஷமா... என கேட்க ஆரம்பித்து விடுவார்கள் உறவுகளின் மத்தியில்...அந்த அளவுக்கு சந்ததி அதாவது வாரிசின் எதிர்பார்ப்பு நிச்சயம் பெற்றோர்களிடமும் உறவுகளிடமும் இருக்கும். ஆனால் இக்கால இளையோர்கள் திருமணம் செய்து கொண்டவுடன் பிள்ளை பிறப்பை தள்ளிப்போடுகிறார்கள்..இது தவறு...இதுபோல்தள்ளிப்போட்டவர்களுக்கு ஆண்டுக்கணக்கில் குழந்தை இல்லாமல் 10 வருடம் கழித்து குழந்தை பிறந்துள்ளது-?..
எனவே யாருமே இந்த தவறினை மட்டும் செய்துவிடாதீர்கள்..காரணம் நாம் இளமையாக இருக்கும்போதே குழந்தை பிறக்க வேண்டும். அப்போதுதான் நாம் தளரும்போது அவர்கள் பொறுப்பேற்பார்கள். இதுவும் ஒரு காரணம்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என வள்ளுவர் சொல்லிவிட்டு போய்விட்டாருங்க... ஆனால் நமக்கெல்லாம் செல்வத்துள் செல்வம் குழந்தைச் செல்வம்தாங்க... எப்படின்னு கேட்கறீங்களா?
Happy Childrens Day 2022 wishes in tamil
Happy Childrens Day 2022 wishes in tamil
ஆமாங்க...நம்ம மனசு நிறைய கஷ்டம் இருந்தாலும் வீட்டுக்கு போனவுடன் குழந்தைகள் முகத்தினைப் பார்த்தாலோ மனசு லேசாகிப்போயிடுங்க.. குழந்தைச் செல்வம் என்பது அந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதுங்க...குழந்தைகள் வீட்டில் இருந்தாலே அது ஒரு கலகலப்பு தான் போங்க.... அதுவும் வீட்டில் உள்ள பெரிசுகளுக்கு குழந்தைகள் இருந்துட்டா கொண்டாட்டந்தான்...தாத்தாக்களுக்கு பேரன் மேலேயும் பாட்டிகளுக்கு பேரன், பேத்தி மேலேயும் அவ்வளவு பற்று... அப்பா, அம்மாவிடம் கூட பாசமாகஇருப்பது கொஞ்ச நேரந்தான்... பாட்டி...தாத்தா மீது குழந்தைகளுக்கு அவ்வளவு ஆசைங்க... எவ்வளவுதான் உங்களிடம் பணம் இருந்தாலும் குழந்தைகள் இல்லாவிட்டால் அந்த செல்வம் அனைத்தும் வீண்தாங்க... காரணம் அப்படித்தாங்க...
குழந்தைகள் தின விழா ஏன் கொண்டாடுகிறோம்-? நாம் நம் தலைப்புக்கு வருவோம்.... பார்ப்போம் வாங்க....
Happy Childrens Day 2022 wishes in tamil
Happy Childrens Day 2022 wishes in tamil
இந்தியாவைப் பொறுத்தமட்டில் ஆண்டுதோறும் நவம்பர்- 14 ந்தேதி குழந்தைகள் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது . இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றவர் நேருமாமா என குழந்தைகளால் அழைக்கப்பட்ட பண்டித ஜவஹர்லால் நேரு. இவர் எப்போதும் தன்னுடைய சட்டையில் ஒரு ரோஜா பூவினை குத்தியிருப்பார்.
அந்த வகையில் குழந்தைகள் மீது அளவு கடந்த பற்று உடையவராக இருந்தார் நேருமாமா. இவரைஇந்தியில் சாச்சா நேரு என அன்புடன் குழந்தைகள் அழைத்தனர். குழந்தைகளுக்கான புத்தகங்களை நேருமாமா எழுதியுள்ளார். அதில் ஒரு மேற்கோளாக இன்றைய குழந்தைகள் நாளை ய தலைவர்கள் என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக நாட்டில் பல இடங்களில் கல்லுாரிகளையும், உயர்கல்வி நிறுவனங்களையும் உருவாக்கிய பெருமை முதல் இந்திய பிரதமர் நேருவைச் சாரும்.
இளையதலைமுறையினர் கையில்தான்இந்திய நாடே உள்ளது என்பதை முழுவதுமாக நம்பியவர். இதற்காக பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். அவரது நினைவாகவே அவரது பிறந்த நாளான நவம்பர் 14ந்தேதியன்று குழந்தைகள் தினவிழாவாக கொண்டாடி வருகிறோம்.
இந்நாளில் பள்ளிகளில் பலவிதமான போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு நடக்கும். இவர் பிரதமராக இருந்தபோதுதான் இந்தியாவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி இலவசம் மற்றும் கட்டாயமானது என்ற திட்டத்தினை ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு பகுதியாக நிறைவேற்றினார்.
இந்த நாளில் நாம் குழந்தைகளுக்கு பலநிலைகளில் நம்முடைய வாழ்த்துகளை தெரிவிக்கிறோம். அதில் ஒருசில வாழ்த்துகள் இதோ. ....உங்கள் பார்வைக்காக....
எல்லாநிலைகளிலும் பொருந்தி வாழ்பவனே
மகிழ்ச்சியான மனிதன்... என்பதே உண்மை...
வரலாறு படிப்பதை விட நாம் புதிய
வரலாற்றினை படைப்பதே இனிமையான செயல்.
உண்மையான நம்பிக்கையானது மலையையும்
அசைத்து பார்க்கும் திறன் பெற்றது....
துணிவால் தான் நாம் பல சாதனைகளை
நிகழ்த்த முடியும்...வெற்றியும் கிடைக்கும்.
Happy Childrens Day 2022 wishes in tamil
Happy Childrens Day 2022 wishes in tamil
பால் மணம் மாறாத பிஞ்சுக்குழந்தைகளுக்கு
இனிய குழந்தைகள் தின வாழ்த்துக்கள்
குழந்தைகள் அனைவருமே தனித்தனி பூக்களே
எல்லா குழந்தைகளும் சேர்ந்துவிட்டால் பூந்தோட்டமே...
தினம் தினம் வண்ண வண்ண உடைகள்
அணியும் வண்ணத்துப்பூச்சிகள்தான் குழந்தைகள்...
மழலைப் பேச்சினைக் கேட்க நாம் ஆயிரம் தவம் செய்திருத்தல் வேண்டுமே இறைவா.....
துரு துரு என ஆடும் சிட்டுக்குருவிகளே...
துள்ளித் துள்ளி குதிக்கும் மான்குட்டிகளே
மனமார்ந்த குழந்தைகள் தின வாழ்த்துகள்...
கவலைகளை மறக்கடிக்க செய்யும் மருந்துகள்
குழந்தையின் பொக்கை வாய் சிரிப்புகள்....
கவலையறியாத வயது, ஓடித்திரிந்த காலம்
மீண்டு வருமா? என ஏங்காத நெஞ்சம் இல்லை
மலரும் நினைவுகளாய் வாழ்த்துகள்....குட்டீஸ்களே..
சேட்டை, குறும்புகள், மழலை மொழியால்
காந்தமென ஈர்க்கும் மெஷின்கள்தான்குழந்தைகள்...
Happy Childrens Day 2022 wishes in tamil
Happy Childrens Day 2022 wishes in tamil
குழந்தைகளே.... குழந்தைகளே....
உங்கள் மழலைப் பேச்சினைக்
கேட்கையில் மனமகிழ்கிறது...
சேட்டையில் வெட்கை தணிகிறது...
குறும்பில் கரும்பாய் இனிக்கிறது...
தத்தகா பித்தகா நடையில்
நளினம் தெரிகிறது...
கவலையறியாத புன்னகையில்
எங்கள் கஷ்டங்கள் ஓடிவிடுகிறது...
குழந்தைகளே...குழந்தைகளே...
நீங்கள் இறைவனின் அருட்கொடையே...
குழந்தைகள் தின வாழ்த்துகள்... குழந்தைகளே...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu