20 லட்சம் மாணவர்கள் எழுதும் ‘நீட்’ தேர்வு: நாளை மறு நாள் நடக்கிறது

20 லட்சம் மாணவர்கள் எழுதும் ‘நீட்’ தேர்வு: நாளை மறு நாள் நடக்கிறது
X
இந்தியா முழுவதும் 20 லட்சம் மாணவ மாணவிகள் எழுதும் ‘நீட்’ தேர்வு நாளை மறு நாள் நடைபெற உள்ளது.

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. 20 லட்சம் மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகிறார்கள்.

உயிர் காக்கும் தொழில் என டாக்டர் தொழில் கருதப்படுகிறது. இதன் காரணமாக மருத்துவ படிப்பில் சேரும் மாணவ மாணவிகள் முறைகேடுகள் இன்றி முழு தகுதியுடன் படித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக மருத்துவ படிப்பிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த கட்டுப்பாடுகளில் முதன்மையானது நீட் எனப்படும் தேசிய தகுதியை நிர்ணயிப்பதற்கான ஒரு நுழைவு தேர்வாகும். இந்த தேர்வுகளை எழுதி உரிய மதிப்பெண் பெற்றால் தான் எம்.பி.பி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளை மாணவ மாணவிகள் சேர முடியும். நீட் தேர்வுக்கு தமிழகம் உட்பட சில மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்த போதிலும் நீட் தேர்விற்கு பயந்து பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட போதிலும் மத்திய அரசு பின்வாங்கவில்லை.

எதிர்ப்பு தெரிவித்து வந்த பல மாநிலங்கள் கூட தற்போது நீட் தேர்வினை ஆதரிக்க தொடங்கி விட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து அரசியல் செய்து வந்தாலும் மாணவர்களும் இந்த தேர்வினை எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வரும் கல்வி ஆண்டில் மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இந்த தேர்வினை எழுதுவதற்காக இந்தியா முழுவதும் சுமார் 20 லட்சம் மாணவ மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் மாணவ மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

நீட் தேர்விற்காக தமிழக முழுவதும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுத உள்ளனர். 7799 மாணவ மாணவிகள் நீட் தேர்விற்கு விண்ணப்பம் செய்துள்ளனர் நாளை மறுநாள் மாலை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு 5. 20 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது .பேருந்து வசதிகளையும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஆள் இல்லாமலே இயங்கும் விமானம்,அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு