நாடு முழுவதும் ரூ.1,570 கோடியில் புதிதாக 157 அரசு நர்சிங் கல்லூரிகள்
செவிலியர்கள் (கோப்பு படம்).
நாடு முழுவதும் ரூ. 1,570 கோடி செலவில் புதிதாக 157 அரசு நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்திய கொரோனா பரவலின் போது மக்களை காப்பாற்றியது மருத்துவ துறை தான். மருத்துவ துறை எனக் கூறும் போது மருத்துவர்கள் மட்டுமின்றி செவிலியர்கள், செவிலிய உதவியாளர்கள், செவிலியர் துறையின் கடைநிலை ஊழியர்கள் என ஏராளமானவர்கள் இத்துறையில் உள்ளனர்.
மருத்துவத்துறை ஊழியர்களின் தன்னலமற்ற சேவையால் உலகின் கொரோனாவின் பிடியிலிருந்து பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது. அந்த வகையில் மீண்டும் இது போன்ற ஒரு பேரிடர் நிலைமை ஏற்பட்டால் மக்களின் உயிரை காப்பதற்காக மருத்துவ துறையில் கூடுதல் பணியாளர்கள் இருக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இதனை உணர்ந்த மத்திய அரசு நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகளை அமைக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மத்திய மந்திரி சபை ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மத்திய மந்திரி சபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நாட்டில் 157 அரசு நர்சிங் பயிற்சி கல்லூரிகள் அமைக்க மத்திய மத்திய சபை ஒப்புதல் அளித்தது. ரூ.157 கோடி செலவில் இவை நிறுவப்படும். தற்போதைய மருத்துவ கல்லூரியின் அருகில் அமைந்துள்ள இடத்துக்கு அருகிலேயே இவை அமைக்கப்படும். அப்போதுதான் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும் என்று மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டலியா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த கல்லூரிகள் இரண்டு ஆண்டுகளில் நிறுவப்படும் என்றும் மலிவானநிலையில், தரமான நர்சிங் கல்வி கிடைக்க செய்வதும் நர்சுகள் எண்ணிக்கையை அதிகரிப்பதும் தான் இதன் நோக்கம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசிய மருத்துவ சாதனங்கள் கொள்கைக்கு இந்த மந்திரி சபை ஒப்புதல் அளித்தது என்றும் மன்சுக் மாண்டலியா மேலும் கூறினார். மருத்துவ சாதனங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வது அதிகரிக்கவும் அவற்றை இறக்குமதி செய்வதை குறைக்கவும் இக்கொள்கை கொண்டுவரப்படுகிறது என்றும் இதன் மூலம் மருத்துவ சாதனங்கள் துறையின் வளர்ச்சி ஐந்து ஆண்டுகளில் 1100 கோடி டாலர்களில் இருந்து 5000 கோடி டாலராக உயரும் என்றும் அப்போது அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu