மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்க எளிய வீட்டு வைத்தியம்

how to stop periods immediately home remedies in tamil-பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்க்க சில எளிய வீட்டுமுறை வைத்திய முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

மாதவிடாய் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வளிக்க எளிய  வீட்டு வைத்தியம்
X

how to stop periods immediately home remedies in tamil-மாதவிடாய் வலி.(மாதிரி படம்)

how to stop periods immediately home remedies in tamil-பெண்களின் வாழ்க்கையில் சிரமமான ஆனால் தவிர்க்க முடியாத விஷயம் மாதவிடாய்.அன்றாட வாழ்க்கையில் பல சிரமங்களை சந்தித்தாலும் இந்த காலகட்டத்தில் மாதவிடாய் சாதாரணமாகிவிட்டது. ஏனெனில் பல பெண்கள் இன்று வேலைக்குச் செல்கிறார்கள்.

மருத்துவ வளர்ச்சியால் மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகளால் தவிர்க்க முடியாத தருணங்களில் மாதவிடாயை ஒரு மாதத்திற்கு கூட தள்ளிப்போடலாம். தொலைதூரப் பயணம் என்று வரும் போது பெண்கள் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

மாதவிடாய் வருவதற்கு முன்னால் என்றால் மாத்திரைகள் மூலம் நிறுத்திவிடலாம். இதுவே மாதவிடாய் ஆரம்பித்தவுடன் என்ன செய்வது? சில பெண்கள் கர்ப்பத்தடை மாத்திரைகளை சாப்பிடுகிறார்கள். அது சிலரது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

வலியில் மன அழுத்தம் :

மாதவிடாய் ஏற்படுகிற காலத்தில் பெண்களுக்கு வலியும் வேதனையும் ஏற்படுவது வழக்கம். அதனால், மன அழுத்தம் கூட ஏற்படும். தலைவலி,வயிற்றுவலி என சிரமப்படுவார்கள். அதற்கு சில வீட்டு மருத்துவக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை பின்பற்றினால் கர்ப்பப்பை தசைகளை தளர்வுறச் செய்யும். இதனால் மாதவிடாய் ஏற்படும் போது வலியும் வேதனையும் குறையும்.அதோடு முற்றிலுமாக மாதவிடாய் நிற்பதற்கும் வாய்ப்புகள் உண்டு.

இபுப்ரோஃபென் ( ibuprofen)

how to stop periods immediately home remedies in tamil-மாதவிடாய் காலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கொடுப்பது இந்த மருந்து. ஆனாலும் டாக்டர் அறிவுரை பெற்று சாப்பிடுவது பாதுகாப்புமிக்கது. இந்த மருந்தை சாப்பிட்டால் மாதவிடாய் ஏற்கனவே ஆரம்பித்திருந்தாலும் நின்றுவிடும் என்று நிரூபணமாகியிருக்கிறது. இந்த மருந்தை ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு முறை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் எடுத்துக் கொள்ள கூடாது.

இது மாதவிடாய் ரத்த ஓட்டத்தை ஐம்பது சதவீதம் குறைக்கும். வேறு எந்த அலர்ஜி அல்லது மருத்துவ குறைபாடு இருப்பவர்கள் என்றால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.


தண்ணீர் குடிப்பது அவசியம்

நம் உடலை ஹைட்ரேட்டடாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்று எல்லாருக்கும் தெரியும். நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உடல் செல்கள் சீராக வளர்ச்சி பெறுவதற்கும் தண்ணீர் மிகவும் அவசியம்.

இது உங்கள் மாதவிடாய் நிறுத்துவதற்கும் பெரிதும் உதவுகிறது. தாராளமாக நிறையத் தண்ணீர் குடிக்கும் போது, உங்கள் மாதவிடாய் ரத்தத்தின் நிறம் வேறுபடும். அதோடு உடலில் இருக்கக்கூடிய டாக்சின்கள் சிறுநீர் வழியாக வெளியேறும். இதனால் மாதவிடாய் விரைவில் நின்றுவிடும்.

வைட்டமின், தாதுக்கள்

how to stop periods immediately home remedies in tamil-மாதவிடாயை நிறுத்த வேண்டும் எனில் உணவுகளில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை சேர்க்கவேண்டும். மாதவிடாய் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்த சத்துக்கள் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு மிகவும் அவசியமான சத்துக்களில் வைட்டமின் ஏ,சி,பி6 மற்றும் பி12 ஆகியனவாகும்.

எப்படி செயலாற்றும்?

இந்த சத்துள்ள உணவுகளை சாப்பிட்ட மறுகணமே மதாவிடாய் நிற்கும் என்பதல்ல. ஐந்து நாட்கள் மாதவிடாய் இருக்கும் எனில் அது மூன்று நாட்களாக குறையும். வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் 'சி' யில் ஏராளமான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் இருக்கின்றன. அதனால் அவை பீரியட்ஸ் நாட்களை குறைக்கும். வைட்டமின் சி, கர்ப்பப்பையில் இருக்கிற ப்ரோஜெஸ்ட்ரோன் அளவு குறையும். அதனால் மாதவிடாய் நாட்கள் குறையும்.


காய்கறி மற்றும் பழங்கள்

உணவு விஷயத்தில் பின்பற்றும் சின்ன சின்ன மாற்றங்கள் கூட மாதாவிடாயில் அது வெளிப்படும். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும். அதே போல பீன்ஸ்,பைனாப்பிள் சாப்பிடலாம்.


மஞ்சள் மற்றும் வெல்லத்தூள்

ஒரு டம்பளர் தண்ணீரில் அரை டீஸ்ப்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கி அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு வெல்லம் சேர்த்து அதை ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிடலாம். இது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பதால் ஒரு வாரத்திற்கும் மேல் குடிப்பது நல்லதல்ல. மாதவிடாய் ஒட்டிய வாரங்களில் மட்டும் குடிக்கலாம்.


எலுமிச்சையை முழுதாக சாப்பிடுவது அல்லது சாறு எடுத்து குடிப்பது

மாதவிடாய் துவங்கியவுடன் எலுமிச்சை பழத்தை எடுத்து அப்படியே சாப்பிடலாம். எலுமிச்சை சாறு எடுத்து தினமும் குடிக்கலாம். எலுமிச்சை சாறு மாதவிடடை வரும் ஒரு வாரத்திற்கு முந்தைய நாளிலிருந்து குடிக்க ஆரம்பிக்கலாம்.


இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடுவது

how to stop periods immediately home remedies in tamil-இஞ்சிக்கு மாதவிடாயை நிறுத்தும் ஆற்றலும் உண்டு. முதலில் இஞ்சியை தோல் நீக்கி சுத்தமாக்கிக் கொள்ளுங்கள்.பின்னர் அதனை பொடியாக நறுக்க வேண்டும்.ஒரு ஸ்பூன் அளவுள்ள இஞ்சியுடன் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் வரை நன்றாக கொதித்ததும்,அந்த நீரை வடிகட்ட வேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.இதனை நீங்கள் மாதவிடாய் வரும் முந்தைய வாரத்திலிருந்தே குடித்து வந்தால் நல்ல பலன் இருக்கும்.


ஆப்பிள் சிடர் வினிகர்

இது உங்கள் மாதவிடாயை உடனடியாக நிறுத்தாது என்றாலும் அறிகுறிகளை குறைக்கும்,மாதவிடாய் ரத்தத்தையும் தடை செய்வதால் மாதவிடாய் விரைவாக நின்றுவிடும். ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு முதல் மூன்று ஸ்பூன் வினிகரைக் கலந்து நீராக்கி குடிக்க வேண்டும்.இதனை ஒரு நாளைக்கு மூன்று முறை குடிக்கலாம்.


ஜெலட்டீன்

இது சிறந்த பலனை தரக்கூடியது. ஒரு கப் நிறையத் தண்ணீரில் ஜெலட்டீன் கலந்து குடிக்க வேண்டும். நீண்ட நேரம் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஜெலட்டீன் கரைந்ததும் எடுத்து குடித்துவிடலாம்.இதனைக் குடித்த மூன்று மணி நேரத்திலிருந்து நல்ல பலனை பார்க்கலாம்.

Updated On: 1 July 2022 12:39 PM GMT

Related News