We Have a Ghost படம் எப்படி இருக்கு? இதுதான் கதை!

We Have A Ghost Tamil Review
We Have A Ghost Tamil Review-இதுவரை எந்த ஒரு ஹாரர் பேய் படத்திலும் வராத புத்தம் புதிய கதை. ஹீரோ குடும்பம் ஒரு புது பங்களாக்கு போறாங்க. அங்க நைட்டு பேய பாக்கறாங்க. இதனால அங்க நடக்குற..
சரி சரி ஆனா நீங்க நினைக்குற படங்கள் மாதிரி இது பயமுறுத்துற பேய் கிடையாது. உங்கள சிரிக்க வச்சி வயிறு வலிக்க வைக்குற பேய். ஆனா படத்த பாக்குறவங்களுக்கு பெரிசா சிரிப்பும் வரமாட்டேங்கறதுங்குறதுதான் காலக்கொடுமை கதிரவா.
நம்மூர்ல ராகவா லாரன்ஸ் மேல பேய் பூந்து அதோட பிரச்னைகளை சொல்லி அழும்போது அண்ணன் இந்த நா உனக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்வார்லயா அதே மாதிரி, இங்கிலீஸ் பேயி, இங்கிலீஷ் காரன்மேல பூந்து அவங்கிட்ட ஹெல்ப் கேட்டிச்சினா அதுதான் வி ஹேவ் ய கோஸ்ட்.
என்னதான் இங்கிலீஷ் பேயா இருந்தாலும் நல்லா தமிழ் பேச வச்சிருக்காங்க. அதாவது நல்ல தமிழ் டப்பிங். நெட்பிளிக்ஸ் ல ரிலீஸ் ஆகியிருக்குற இந்த படத்த போர் அடிக்குது வேற வேலை எதுவும் இல்ல நல்ல படங்களையெல்லாம் பாத்துட்டேன்னு நினைக்குறவங்க பாக்கலாம்.

கதைப்படி ஹீரோவோட குடும்பம் ஒரு புது வீட்டுக்கு போகுது. வீட்டு ஓனர் வழக்கம்போல இவங்க வர்றதுக்கு முன்னாடியே பேய்க்கு வீட்ட வாடகைக்கு குடுத்து வச்சிருக்காரு.
சரி நாமதான் வாடகை வாங்காம குடியிருக்கிறோமேங்குற குத்த உணர்ச்சிகூட இல்லாம அந்த பேயி வந்தவங்கள பயமுறுத்த, அந்த வீட்டுல ஒரு பையன் இத பாத்து பயமே இல்லாம வீடியோ எடுக்க, அட பேய்க்கு உண்டான மரியாதை போச்சடான்னு பேயி ஃபீல் பண்ணி அழ, அப்பாகிட்ட அவன் போயி சொல்ல, இவன் சொல்றது பொய்யின்னு அவரு நம்பாம போக, பேயி, இந்த பையன் அவங்க அப்பாவுக்கு மத்தியில ஒரு கதையை கொண்டு போவாங்கன்னு பாத்தா, தமிழ் படத்துல வர்ற பேய் மாதிரியே எனக்கு ஒரு பிரச்னை இருக்குனு சொல்லி அழகுது பேயி.

அடடா. நம்மதான் பேய்க்கும் இரங்கும் இரக்ககுணம் படச்ச அக்மார்க் அம்மாஞ்சியாச்சேன்னு உணர்ந்த அந்த பையன் பேய்க்கு உதவுறான். அப்றம் என்ன ஆச்சிக்குறதுதான் கதை. படம் பாத்து முடிக்கிறப்பதான் தெரிஞ்சிது படத்துல பேய் தான் ஹீரோன்னு.
கிட்டத்தட்ட இது ஒரு ஹாலிவுட் முனி படம் தான். நமக்கு முனி படம் பாக்கறப்ப ஜாலியா, பயமா இருந்துது. செண்டிமெண்ட் சீன்லாம் கறிக்கொழம்ப சாப்பிட்டுட்டு கதறிக் கதறி அழத் தோணிச்சு. ஆனா இந்த படத்த பாக்கும்போதே சாப்பாடு உள்ள போகாதுன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி. அதனால நமக்கு இந்த படம் செட் ஆகல. நீங்க வேணும்னா கொஞ்சம் டிரை பண்ணி பாருங்க.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu