Vaathi தனுஷுக்கு இதுதான் முதல்முறை! முதல் நாளிலேயே தெரிஞ்சிடும்!

Vaathi தனுஷுக்கு இதுதான் முதல்முறை! முதல் நாளிலேயே தெரிஞ்சிடும்!
தெலுங்கு பதிப்பில் இந்த படம் சார் எனவும் தமிழில் வாத்தி எனவும் அழைக்கப்படுகிறது. தமிழில் 600 திரைகளிலும், தெலுங்கில் 550 திரைகளிலும் ரிலீஸாகிறது இந்த படம்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படம்தான் இதுவரை வெளியான தனுஷ் படங்களிலேயே அதிக திரைகளில் வெளியாகிறது வாத்தி திரைப்படம். தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் சேர்த்து மிக அதிக திரைகளில் ரிலீஸாவதால் மிகப் பெரிய பிசினஸ் கணக்கு போடப்பட்டிருக்கிறது.

தெலுங்கு சினிமாவின் புதிய இயக்குநர் வெங்கி அட்லூரி, தனுஷிடம் கதை சொன்ன உடனேயே சம்மதித்து ஒப்பந்தமான படம் வாத்தி. சித்தாரா எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் ஃபார்ச்சூன் ஃபார் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ளது. தயாரிப்பாளர்கள் நாக வம்சி, சாய் சவுஜன்யா இருவரும் படத்தை தயாரித்துள்ளனர். வரும் 17ம் தேதி இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.

தெலுங்கு பதிப்பில் இந்த படம் சார் எனவும் தமிழில் வாத்தி எனவும் அழைக்கப்படுகிறது. தமிழில் 600 திரைகளிலும், தெலுங்கில் 550 திரைகளிலும் ரிலீஸாகிறது இந்த படம். தனுஷ் ஜோடியாக சம்யுக்தா நடித்திருக்கிறார். சம்யுக்தா மேனன் எனும் இயற்பெயரைக் கொண்ட இவர் தனக்கு சாதிப் பெயரை தன் பெயரின் பின் பயன்படுத்துவதில் உடன்பாடு இல்லை என்று கூறி அதனை நீக்க கோரியுள்ளார். திரைப்படத்திலும் சம்யுக்தா என்றே வருமாம்.

இவர்களுடன் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோடப்பள்ளி மது, சாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன்,பிரவீணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு மிகப் பெரிய பலமாக ஜி வி பிரகாஷ்குமார் இசை இருக்கிறது. மற்ற டெக்னிசியன்களும் படத்துக்கு பக்கபலமாக இருப்பார்கள். மேலும் இந்த படத்தின் மூலம் தனுஷின் பிசினஸ் கணக்கு வேறு லெவலுக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

முதல் காட்சியே கிட்டத்தட்ட 1100க்கும் அதிகமான திரைகளில் உலகம் முழுக்க ரிலீஸ் ஆகிறது. முதல் நாளில் தமிழில் 8 மணிக்கு காட்சிகள் துவங்குகின்றன. பெரும்பான்மையான திரையரங்குகளில் நாளொன்றுக்கு குறைந்தது 3 காட்சிகளாவது வாத்தி திரையிடப்படும். மல்டிபிளக்ஸ்களில் 4 முதல் 6 காட்சிகள் வரை இருக்கலாம். இதனால் மிகப்பெரிய வசூலை முதல் நாளிலேயே அள்ளலாம் என கணக்கு போட்டிருக்கிறார்கள்.

Tags

Next Story