நடிகர் கலாபவன் மணி மரணத்தில் 6 ஆண்டுக்கு பின் வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் 6 ஆண்டுக்கு பின் வெளியான அதிர்ச்சி தகவல்

நடிகர் கலாபவன் மணி.

நடிகர் கலாபவன் மணி மரணத்திற்கான காரணம் பற்றி 6 ஆண்டுக்கு பின் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் கலாபவன் மணி மரணத்தில் ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகர் கலாபவன் மணி தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழில் இவர் நடித்த ஜெமினி, பாபநாசம், அந்நியன், உள்ளிட்ட சில படங்கள் சிறப்பாக அமைந்தன. கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஆட்டோ டிரைவர். நாடக மற்றும் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக முதலில் மிமிக்ரி கலைஞராக தனது திரை உலக பயணத்தை தொடங்கினார்-

அதன் பின்னர் தமிழ் மற்றும் மலையாள படங்களில் அதிக அளவில் நடிக்க தொடங்கினார். வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை என பன்முகத்தன்மை கொண்ட இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் நண்பர்களுடன் பார்ட்டியில் இருந்தபோது திடீரென மரணம் அடைந்தார். நண்பர்களுடன் குடிபோதையில் இருந்த போது அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் அல்லது விஷம் வைத்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என பல சர்ச்சைகள் அப்போது செய்திகளாக வெளிவந்தன.

இந்நிலையில் அந்த சர்ச்சைக்கு இப்போது முடிவு கட்டும் வகையில் கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரி உன்னி ராஜன் என்பவர் ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில் கலாபவன் மணி நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும் அவர் குடிப்பழக்கத்தை கைவிடவில்லை. தினமும் 10 அல்லது 12 பீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார். சம்பவ தினத்தன்றும் அவர் 12 பேர் பாட்டில்களை காலி செய்து உள்ளார். இதன் காரணமாகவே அவருக்கு மரணம் நிகழ்ந்துள்ளது என்று கூறியுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி உள்ள இந்த கருத்தினால் கலாபவன் மணி மரணத்தில் இருந்த சர்ச்சை விலகி இருப்பதோடு அவரது பீர் பழக்கம் பற்றிய அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது.

Tags

Next Story