வேறொரு கோணத்தில்.... ரஜினிகாந்த் டார்க் காமெடியா?

வேறொரு கோணத்தில்.... ரஜினிகாந்த் டார்க் காமெடியா?
X
சந்திரமுகி 2 படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி 2 படத்தை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி பேசியுள்ளார். மேலும் படத்தின் வெற்றிக்கு அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சந்திரமுகி 2 திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் ராஜா வேடத்தில் ராகவா லாரன்ஸும், ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தில் கங்கனா ரனாவத்தும் நடித்துள்ளனர். இவர்களுடன் ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.

படம் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 7.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய்வரை வசூலித்துள்ளது. முதல் பாகம் வெளியானபோது முதல் நாளில் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்த விமர்சனங்கள் பெரும்பாலும் கலவையாகவே உள்ளன. ஜோதிகா மற்றும் ரஜினிகாந்த் நடித்த முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்திலும் சந்திரமுகி மற்றும் வேட்டையன் கதாபாத்திரங்கள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே நேரம் வேட்டையன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பை பலரும் ரஜினிகாந்துடன் ஒப்பிட்டு பேசி வருகின்றனர். ரஜினிகாந்த் அளவுக்கு லாரன்ஸ் கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக அமையவில்லை என்கிறார்கள்.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ராதிகா சரத்குமார், வடிவேலு, லக்ஷ்மி மேனன், மஹிமா நம்பியார் ஆகியோரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில் முதல் பாகத்தில் வேட்டையன் ராஜாவாக நடித்த ரஜினிகாந்த், சந்திரமுகி 2 படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மிகப்பெரிய வெற்றி படமான தன்னுடைய சந்திரமுகியை புதிதாக வேறு ஒரு கோணத்தில் ஒரு பிரம்மாண்ட பொழுதுபோக்குப் படமாக சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கும் நண்பர் வாசுவுக்கும், அருமையாக நடித்திருக்கும் தம்பி ராகவா லாரன்ஸுக்கும் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள் என்று அவர் கூறியுள்ளார்.

சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் மனோதத்துவ நிபுணர் சரவணனாகவும், வேட்டையன் ராஜா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜோதிகா செந்திலாக நடித்த பிரபுவின் மனைவி கங்காவாக நடித்திருந்தார். மேலும் தன்னை சந்திரமுகியாக நினைத்து மனோதிக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர்கள் தவிர பிரபுவின் மாமாக்களாக நடித்த நாசர், வடிவேலு ஆகியோரும் நடிப்பில் அசத்தியிருந்தனர்.

தனது நண்பன் செந்தில்நாதனை காண அமெரிக்காவிலிருந்து வரும் மனோத்துவ நிபுணரான டாக்டர் சரவணன், அம்மா கஸ்தூரி மனக் குழப்பத்தில் இருப்பதை புரிந்து கொண்டு அதற்கான காரணத்தை தெரிந்து கொள்கிறார். செந்திலுக்கும் அவர்கள் குடும்பத்துக்கும் இடையே இருக்கும் பிரச்னையை புரிந்துகொண்டு அதில் சமரசத்தை ஏற்படுத்த அம்மா கஸ்தூரி வேண்டுகோளுக்கு இணங்க வேட்டயபுரம் அரண்மனைக்கு செல்கிறார். அங்கு பேய் பிசாசு இருப்பதாக ஊர்மக்கள் கூறுவதை நம்பாத சரவணன், செந்தில் - கங்காவை அங்கு குடியமர்த்த நினைக்க, தனியாக இருக்கவேண்டாம் என மொத்த குடும்பத்தையும் அகிலாண்டேஸ்வரி அந்த அரண்மனையில் தங்க உத்தரவிடுகிறார்.

அங்கு கங்காவுக்கு இருக்கும் பிரச்னையால் சந்திரமுகி தனக்குள் வருவதாக நினைத்து அவள் ஆடும் ஆட்டத்தை மனோதத்துவ முறையில் சரி செய்ய முற்படுகிறார் சரவணன். முடிவில் ஜோதிகா மனம் தெளிந்து குணமாகிறார்.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!