திருச்சி அருகே நடிகர் விஷாலை தேடி பிடித்து சந்தித்த அமைச்சர் நேரு

திருச்சி அருகே நடிகர் விஷாலை தேடி பிடித்து சந்தித்த அமைச்சர் நேரு
திருச்சி அருகே படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷாலை சந்தித்த அமைச்சர் நேரு.
திருச்சி அருகே நடிகர் விஷாலை தேடி பிடித்து அமைச்சர் நேரு சந்தித்து பேசினார்.

தமிழ் திரை உலகில் சாமி, ஐயா, தாமிரபரணி, சிங்கம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ஹரி. இவரது இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்த தாமிரபரணி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் தற்போது நடிகர் விஷால்,நடிகை பிரியா பவானி சங்கர் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடிக்கும் ஒரு படத்திற்கு விஷால் 34 என்று தற்காலிகமாக பெயரிட்டு உள்ளனர் இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார்.

தற்போது இந்த திரைப்படத்தின் சில முக்கிய காட்சிகள் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படப்பிடிப்பானது திருச்சி -சிதம்பரம் சாலை லால்குடி அருகே சிறுமருதூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு சென்றார்.

அவரது சொந்த ஊர் லால்குடி அருகே உள்ள காணக்கிளியநல்லூர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் செல்வதை கண்டதும் படப்பிடிப்பு குழுவினர் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். இதைக் கண்ட அமைச்சர் நேரு தனது காரை நிறுத்தி படப்பிடிப்பு நடைபெறுவதை பார்த்தார். பின்னர் படக்குழுவினரை சந்தித்து அவர்களுடன் உரையாடி உள்ளார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் நேரு வந்திருப்பதை அறிந்த நடிகர் விஷால் அங்கு வந்து அமைச்சரை வரவேற்றார். மேலும் அவருடன் இயக்குனர் ஹரி, நடிகர் சமுத்திரக்கனியும் வரவேற்றனர் பின்னர் அமைச்சருக்கு படக்குழுவினர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனை அடுத்து திரைப்படம் வெற்றிபெற அமைச்சர் நேரு வாழ்த்து தெரிவித்துள்ளார் மேலும் படப்பிடிப்பு குழுவினர் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களையும் அமைச்சர் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags

Next Story