அடுத்த ஆதி குணசேகரன்... உண்மைதான் ஆனா? போட்டுடைத்த வேலா ராமமூர்த்தி!

அடுத்த ஆதி குணசேகரன்... உண்மைதான் ஆனா? போட்டுடைத்த வேலா ராமமூர்த்தி!
X
ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் மாரிமுத்து இறந்ததைத் தொடர்ந்து அவரது இடத்தில் வேலா ராமமூர்த்தி நடிப்பதாக கூறப்படுகிறது.

எதிர்நீச்சல் தொடரில் இயக்குநர் மாரிமுத்து ஏற்று நடித்த குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க கிட்டத்தட்ட அவரைப் போலவே நடந்து கொள்ளும் வேலா ராமமூர்த்தியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், அவர் உண்மையைப் போட்டுடைத்துள்ளார்.

எதிர்நீச்சல் தொடரில் குணசேகரனாக வாழ்ந்தவர் இயக்குநர் மாரிமுத்து. இவர் மாரடைப்பு காரணமாக இன்று இறந்துவிட்டார். இதனால் எதிர்நீச்சல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியிருக்கின்றனர். எதிர்நீச்சல் தொடரில் நடிக்கிறவர்கள் இயக்குநர், எழுத்தாளர், உதவியாளர்கள் உட்பட அனைவரும் மாரிமுத்துவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சீரியலில் கடுமையாக நடந்துகொள்ளும் குணசேகரன் கதாபாத்திரத்தை ஏற்று நடித்த மாரிமுத்து நிஜத்தில் அதற்கு நேர்மாறானவர். நடிப்புதான் அவர் மூச்சு. எப்படி நடிப்பது, எப்படி ஆடிசன் செய்வது, எப்படி ஒருவரை நடித்து அசத்துவது என்பதைதான் அவரது நண்பர்களிடம் எப்போதும் பேசிக் கொண்டிருப்பாராம்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவருடனும் நடித்துவிட்ட நிலையில், அவர் தொடர்ந்து சினிமாவில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம். இறுதி மூச்சு வரை அவர் நடித்துக் கொண்டே இருந்திருக்கிறார் என்கிறார்கள்.

எதிர் நீச்சல் தொடரின் டப்பிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் அவர் திடீரென படபடப்பாக இருந்ததை உதவியாளர்கள் உணர்ந்து கேட்டபோது, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன் என்று வெளியில் சென்றாராம். பின் தனது மகளுக்கு அழைத்து அவரை உடனடியாக வரச் சொல்லியிருக்கிறார் போலிருக்கிறது. ஆனால் அவர் வரத் தாமதமாகும் என நினைத்தவர் அவரே காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனையில் சென்று சேர்ந்திருக்கிறார். ஆனால் காப்பாற்றமுடியவில்லை என்று விசயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியல் இப்போது படுவேகமாக சென்று கொண்டிருக்கிறது. அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வேறு யாரையும் கற்பனை கூட செய்ய முடியாத நிலை உள்ளது. அவரைப் போல வில்லத்தனமும் நக்கல் நையாண்டியும் கலந்து ஊர் பாஷை பேசும் ஒருத்தரை எங்கு சென்று கண்டுபிடிப்பார்கள் என ரசிகர்கள் யோசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க, இளவரசு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக ஒருமுறை மாரிமுத்து இந்த சீரியலை விட்டு வெளியேற முடிவு செய்தால் அவருக்கு பதிலாக யாரை நடிக்க வைக்கலாம் என ஆலோசனை நடத்தியபோது இளவரசுவை நடிக்க வைக்கலாம் என பேசப்பட்டதாம். ஆனால் இந்த கதாபாத்திரத்துக்கு அவர் சரிபட்டு வரமாட்டார் என்று கூறுகிறார்கள்.

அதேநேரத்தில் வேலா ராமமூர்த்தியிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வெறும் தகவலாக வெளியான நிலையில், அவரிடமே பேட்டி ஒன்றில் கேட்டபோது, அவர் உண்மையை போட்டுடைத்துவிட்டார். தன்னிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவது உண்மைதான் என்றாலும் தான் இன்னமும் ஒப்புக்கொள்ளவில்லை என்பதுபோல சூசகமாக தெரிவித்தார்.

அவர் முக்கியமான படம் ஒன்றில் படுபிஸியாக இருப்பதுதான் அதற்கு காரணம் என்பது போல தெரிகிறது. சசி குமார் இயக்கத்தில் உருவாகி வரும் வெப்சீரிஸ் படம் ஒன்றில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் அவர்.

இதனிடையே வேலா ராமமூர்த்தி ஓகே சொல்லவில்லை என்றால், OAK சுந்தர் அல்லது சேத்தன் இருவரில் ஒருவர் இந்த கதாபாத்திரத்தை செய்யலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுந்தர் கமல்ஹாசனின் விருமாண்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றியவர். மகாபாரதத்தில் பீஷ்மாவாகவும், அடுத்து ஒரு தொடரில் ரோமாபுரி பாண்டியனாகவும் நடித்து புகழ்பெற்றவர். டிவி சீரியல்கள் பலவற்றிலும் தோன்றி நடித்து அசத்தியிருக்கிறார்.

மர்மதேசம், காதலிக்க நேரமில்லை, மை டியர் பூதம், பைரவி, மகாபாரதம், ரோமாபுரி பாண்டியன் உள்ளிட்ட தொடர்களில் இவர் புகழ்பெற்றார்.

சேத்தனும் டிவி மற்றும் சினிமாக்களில் நடித்து புகழ் பெற்றவர்தான். ராமாயணம், மர்மதேசம், நிம்மதி உங்கள் சாய்ஸ், மெட்டி ஒலி, மலர்கள், அத்திப்பூக்கள், உதிரிப்பூக்கள் என பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அசத்தியவர்.

இவர்கள் தவிர, வேறு சில பெயர்களும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள் எனினும் அதிகாரப்பூர்வமாக இதுவரை எதிர்நீச்சல் தரப்பு இந்த தொடரின் புது நாயகனைப் பற்றி அறிவிப்பு வெளியிடவில்லை.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!