அஜித்துடன் மீண்டும் மோதும் விக்டர்! மகிழ்திருமேனி படத்தில் இப்படி ஒரு ஆச்சர்யம்!

அஜித் குமார் நடிக்கும் புதிய படத்தில் மிக வெயிட்டான வில்லன் கதாபாத்திரம் ஒன்று இருக்கிறதாம். அதில் பிரபல ஹீரோ ஒருவரை நடிக்க வைக்க மகிழ் திருமேனி நினைக்கிறாராம். இதனால் யார் அந்த ஹீரோ, அவர் வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா என கோலிவுட் வட்டாரமே பரபரக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் அஜித்குமார் நடிக்கும் படம் துவங்க இருக்கிறது என துணிவு பட வெளியீட்டின்போது பேசி வந்தோம். ஆனால் இடையில் ஏற்பட்ட துரதிஷ்டவசமான முடிவுகளால் விக்னேஷ் சிவன் அந்த வாய்ப்பை இழந்தார். அதற்கும் அவர்தான் காரணம் என்றாலும், இது துரதிஷ்டமான முடிவுதான். அவருக்கு பதில் அஜித் தேர்ந்தெடுத்தது மகிழ்திருமேனியின் கதையைத்தான். வழக்கமாக ஒரு இயக்குநரைப் பிடித்துவிட்டால் 3,4 படங்களைத் தொடர்ந்து அவருக்கே பண்ணும் அஜித்குமார் அவருக்கு பிடிக்கவில்லை என்றால் படத்திலிருந்து தூக்கவும் தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது.
மகிழ்திருமேனி மொத்தம் 2 கதைகளை அஜித்திடம் தெரிவித்திருக்கிறார். முதல் கதை காமெடி, செண்டிமென்ட், காதல் கலந்த ஒரு அதிரடி ஆக்ஷன் திரைப்படம். இது கிட்டத்தட்ட வீரம் படத்தைப் போல இருக்கும். ஆனால் ஆக்ஷன் வெறுமனே இல்லாமல் அதில் ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்கும் என்கிறார்கள்.
மகிழ்திருமேனி அஜித்திடம் சொல்லியிருக்கும் இரண்டாவது கதை, ஒரு ஸ்பை திரில்லர். இது கிட்டத்தட்ட துப்பாக்கி படத்தைப் போன்றது. ஆனால் நாயகனும் வில்லனும் சம பலம் பொருந்திய ஆட்கள். இதனால் மாஸ்டர் படம் மாதிரி இன்னொரு ஹீரோவுக்கு அதிக காட்சிகள் போய்விடக்கூடாது என அஜித் மிகவும் உறுதியாக இருக்கிறார்.
இந்நிலையில், இந்த ஸ்பை திரில்லர் கதையைத் தான் முதலில் எடுக்கப் போகிறார்களாம். மொத்தம் 3 தலைப்புகளைத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதை பதிவும் செய்து வைத்திருக்கிறார்கள். முதல் படத்துக்கு ஒரு தலைப்பை சூட்டி விட்டால், அடுத்த படத்துக்கு மிச்சம் இருக்கும் 2ல் ஒன்றை வைக்கலாம் என திட்டம் போட்டிருக்கிறார்களாம்.
அஜித்குமார் 62ல் அவருக்கு வில்லனாக நடிக்க அருண்விஜய்யிடம் பேசலாம் என யோசித்து வருகிறார்களாம். விக்டர் கதாபாத்திரத்தையும் தாண்டி இந்த படத்தில் அஜித்துக்கு நிகரான அவரையே நடிப்பில் ஓவர்டேக் செய்யும் அளவுக்கான ரோலாம். அதனால் அருண் விஜய் சரியாக இருப்பார் என்று கூறுகிறார்கள். அப்படி அவர் இல்லை என்றால், அருள்நிதி சரியாக இருப்பார் என்றும் பேசி வருகிறார்கள்.
மகிழ்திருமேனி முதலில் அருண்விஜய்யிடம் பேசி அவரை சம்மதிக்க வைக்கலாம் என்றே நினைக்கிறாராம். அஜித்துடன் நல்ல ஒத்துபோகும் என்பதாலும், இரண்டு சூப்பர்ஹிட் படங்களை அருண்விஜய்க்கு கொடுத்தது நம்ம மகிழ்தான் என்பதாலும் அவர்மீது அப்படி ஒரு நம்பிக்கை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu