இமைகளை ஏற்றவைக்கும் ஏஞ்சல்.. சினேகாவின் பெண்கள் தின போட்டோஷூட்

tamil actress sneha latest look - தென்னிந்திய திரைத்துறையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் 90 காலகட்டங்களில் தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ்த் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
இவருடைய அழகிய சிரிப்பு ரசிகர்களிடையே பெரிதும் கவர்ந்து வந்தது. இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் இவரை புன்னகை அரசி என்றே அழைத்து வந்தனர். கடந்த 2012ம் ஆண்டு சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார. இவர்களின் திருமணத்திற்குப் பின், இருவருமே சினிமாவில் சிறந்த ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.
இதனைத்தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா பெரிதாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. சினேகா சில ஆண்டுகளுக்குப்பின், தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இதனையடுத்து தற்போது தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் சில திரைப்படங்களில் சினேகா நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு என இரு சின்னத்திரையிலும் சில நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வருகிறார். நடிகர் பிரசன்னாவும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.
actress sneha latest images
குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது என தன் வாழ்க்கையை வாழ்ந்து வரும் சினேகா, தனது கணவரும், நடிகருமான பிரசன்னாவிடம் சொல்லி மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். அவரும் சிநேகாவிற்கு பட வாய்ப்புகளை வாங்கிக் கொடுக்க தனது நெருங்கிய சினிமா வட்டார நண்பர்களிடம் அணுகி வருகிறாராம்.
திருமணத்திற்குப்பின் நடிகை சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தையைத் தொடர்ந்துபெண் குழந்தையும் அவர்களுக்கு பிறந்தது. அந்த வகையில் இந்த தம்பதியினர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர்.
tamil actress sneha trending images 2023
நடிகை சினேகா சமூக வலைத்தள பக்கங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார், தொடர்ந்து போட்டோ ஷூட் படங்களை அவர் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியும் வருகிறார். அந்த வகையில் கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் தனது குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து பிங்க் நிற ஆடையுடன் மெல்லிய சிரிப்பை வெளிப்படுத்தும் அவரது புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். அதேபோல், தொடர்ந்து வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகியுள்ள நிலையில், காண்போரை பொறாமை கொள்ளும் அழகு எனவும், உங்களைப்போல இருக்க வேண்டும் எனவும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் மகளிர் தின வாழ்த்துக்களையும் கூறியுள்ளார். இதுவும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu