வாரிசுகளுக்கான வாய்ப்புகள் இலகுவாகிறது..! நடிகை ஆத்மீகா போட்ட பதிவு..!
aditi shankar director shankar daughter-விருமன் பட போஸ்டர்.
நடிகையாக அவதாரம் எடுத்த இயக்குனர் ஷங்கர் மகள்
Shankar Director Daughter -தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் அறிமுகமாகி வருவது ஒன்றும் புதிதல்ல. சிவாஜி மகன்,பேரன், சிவகுமார் மகன்கள், விஜயகுமார் மகன்.மகள்கள், இயக்குனர் பாக்யராஜ் மகன்.மகள் என தொடர்கிறது.
சினிமா பின்புலம் இல்லாமல் எத்தனையோ திறமைசாலிகள் வாய்ப்பின்றி இருக்கிறார்கள். ஆனால், சினிமா பின்புலம் உள்ள பிரபலங்களின் வாரிசுகள் எளிதாக சினிமாவுக்குள் நுழைவதற்கு பாலிவுட் சினிமாவில் அவ்வப்போது சலசலப்புகள் ஏற்படுவதுண்டு.
அந்த வரிசையில், இப்போது தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி, விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமாக உள்ளார். அண்மையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கூட பிரம்மாண்டமாக நடந்தது.
ஆத்மிகா போட்ட பதிவு
நடிகை ஆத்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில், சிலருக்கு வாய்ப்புகள் இலகுவாக கிடைத்துவிடுகிறது. ஆனால் ஏணி கிடைக்காத பலர் வாய்ப்பின்றி இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார்.
director shankar daughter-அதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிலும் Nepotism அதிகரித்துவிட்டது. ஷங்கர் மகள் அதிதி குறித்துத் தான் நடிகை ஆத்மிகா மறைமுகமாக பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu