சாதியைத் துறந்த நடிகை... குவியும் பாராட்டுகள்!

சாதியைத் துறந்த நடிகை... குவியும் பாராட்டுகள்!
X

சாதி அடையாளத்தைப் போட்டுக் கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என வெளிப்படையாக கூறிய நடிகைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

சாதி அடையாளத்தைப் போட்டுக் கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என வெளிப்படையாக கூறிய நடிகைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சாதி அடையாளத்தைப் போட்டுக் கொள்வதில் தனக்கு விருப்பமில்லை என வெளிப்படையாக கூறிய நடிகைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தமிழ் சினிமாவுக்கு வருகை தரும் மற்ற மொழி நடிகைகளுள் பெரும்பான்மை மலையாள நடிகைகள்தான். நயன்தாரா உட்பட தமிழ் சினிமாவை ஆண்ட பல நடிகைகள் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்தான். அப்படி தற்போது தமிழக இளைஞர்களின் மனதை ஆட்கொள்ள வந்திருப்பவர் கேரளத்தைச் சேர்ந்த சம்யுக்தா மேனன். ஸாரி. அவருக்கு சாதி பெயரை பின்னால் போட்டுக்கொள்ள விருப்பமில்லை என்பதால் இனி சம்யுக்தா என்றே அழைக்கலாம். குழப்பத்தை தவிர்க்க வாத்தி சம்யுக்தா என்றே குறிப்பிடலாம்.

வாத்தி படத்தின் மூலம் தமிழில் தனுஷ் ஜோடியாக அறிமுகமாகிறார் சம்யுக்தா. இவருக்கு இப்போதே தமிழில் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியிருக்கிறது.

சைன் டாம் சாக்கோ ஜோடியாக பாப்கார்ன் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் சம்யுக்தா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் இவரது முதல் படம் களரி. கடந்த 2018ம் ஆண்டு இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

ஜூலைக் காற்றில் படத்திலும் இவர் நடித்திருந்தார். ஆனால் முழு கதாநாயகியாக இப்போது தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படத்தில்தான் அறிமுகமாகிறார்.

திருச்சிற்றம்பலம் படத்தைத் தவிர சமீப நாட்களில் பெரிய ஹிட் படம் எதுவும் தனுஷுக்கு அமையவில்லை. இதனால் மார்க்கெட்டை நிலை நிறுத்த மிகப் பெரிய வெற்றிப் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தனுஷ். அந்த எதிர்பார்ப்பை வாத்தி படம் பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது.

வாத்தி திரைப்படம் வரும் பிப்ரவரி 17ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனிடையே இந்த படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வரும் படக்குழு பல்வேறு வகையில் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், நாயகியாக நடித்துள்ள சம்யுக்தா தனது பெயரில் இருக்கும் சாதி பெயரை இனி பயன்படுத்தப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

சாதி அடையாளத்தை தனது பெயருக்கு பின்னால் போடுவது பிடிக்காத விசயம் என அவர் தெரிவித்துள்ளார். கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வரப் போராடும் ஆசிரியர், ஆசிரியை கதாபாத்திரங்களில் இவரும் தனுஷும் நடித்திருக்கிறார்களாம். இதனாலேயே அம்மணி மனம் திருந்தி சாதி பெயரை துறந்திருக்கிறாரோ என்னவோ!

Tags

Next Story
உலகத்திலேயே அதிகமாக  இந்தியர்களுக்கு இதனால்தான் சுகர் வருதாம் ...! கவனமா படிங்க ...!