Tune out the news-செய்திகளின் மீதான ஆர்வம் குறைந்து வருகிறதா..? புதிய ஆய்வு என்ன சொல்கிறது?

சமீப காலமாக சில குறிப்பிட்ட செய்திகளை மக்கள் தவிர்த்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

Update: 2023-08-26 12:44 GMT

Trying to tune out the news these days, Tune out the news, Reuters Institute survey

இங்கிலாந்தில்  உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் இருந்து ஒரு புதிய உலகளாவிய ஆய்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது பலர் குறிப்பாக உக்ரைன் போர் மற்றும் அமெரிக்க அரசியல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய செய்திகளைத் தவிர்த்துவிடுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தற்போதைய சூழலில் செய்திகளை பார்த்தாலே போதும் நாம் தனிமையில் இல்லை என்பதை நாம் உணரலாம். ஏனெனில் நம்மோடு பேச செய்திகள் உள்ளன. தனிமை நம்மை வாட்டுவதில்லை. அந்த அளவுக்கு செய்திகள் நம் கைகளில் வந்து குவிகின்றன. கையடக்க டிவி போல செய்திகளை சுமந்து வருகிறது செல்போன்.

குறிப்பாக உடனுக்கான உள்ளூர் செய்திகள் முதல் தேசம் மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் பார்க்கும் வசதியைத் தருகிறது.

ஆனால், சமீப காலமாக மக்கள் சில குறிப்பிட்ட செய்திகளை வலுக்கட்டாயமாக புறக்கணிப்பது தெரிய வந்துள்ளதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆய்வுகள் உறுதிப்படுத்துவதாக தெரிய வந்துள்ளது.

இவ்வாறான செய்திகளால் சிலர் கோபமடைவதாகவும், மனச்சோர்வு அடைவதாகவும் சொல்கிறார்கள். இன்னும் சிலர் இந்த தகவல் பரிமாற்றங்களில் இருந்து தப்பி ஒரு இடைவெளியை உருவாக்க விரும்புகிறார்கள்.

Trying to tune out the news these days

பழங்கால செய்தித்தாள் அல்லது வானொலி அல்லது டிவி செய்திகளை விட சமூக ஊடகங்களில் பிரபலங்களின் புதுப்பிப்புகளில் சிலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் ஃபார் தி ஸ்டூடி ஆஃப் ஜர்னலிசத்தின் சமீபத்திய ஆராய்ச்சியின் சில கண்டுபிடிப்புகள் இவை.

ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிடியூட் கணக்கெடுப்பு உலகளாவியது. இருப்பினும் அமெரிக்காவைப் பார்க்கும்போது ஆய்வின் போது பதிலளித்த 10 அமெரிக்கர்களில் ஒருவர் , ஒட்டுமொத்தமாக செய்திகளை முற்றிலும் தவிர்த்ததாக கூறியுள்ளார்.

மேலும் அதில் சிலர் சில நேரங்களில் அல்லது அடிக்கடி செய்திகளைத் தவிர்ப்பதாக கூறுகிறார்கள். இதில் - 41% பெண்கள், 34% ஆண்கள். மேலும், செய்திகளின் மீதான அதீத ஆர்வத்தின் விகிதம் சமீப காலங்களில் குறைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது நாடு முழுவதும் ஒரே மாதிரியாகவே உள்ளன. குறிப்பாக பெண்கள் மற்றும் இளையவர்களிடையே செய்திகள் மீதான ஆர்வம் குறைவாகவே இருப்பதும் தெரிய வந்துள்ளது.

சிலர் தினசரி நிகழ்வுகள் அல்லது செய்திகளை வாசிக்கும் பழக்கம் இருப்பது வழக்கமான செயல்பாடுகளில் ஒன்றாக கூறியுள்ளனர். அதாவது அவர்கள் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்.

Trying to tune out the news these days

ஆனாலும் அவர்களும் சில செய்திகளைப் படிக்கும் போது மிகவும் மனச்சோர்வடைவதாகவும் கூறுவதாக தெரிய வந்துள்ளது. உலகம் முன்பு இருந்ததைப்போல இல்லை என்பதை தினமும் படிக்கும் செய்திகள் பிரதிபலிப்பதாகவும் அதனால் செய்திகளைப் படிக்கும்போது அது நிச்சயமாகவே உணரப்படுவதாகவும் கூறுகிறார்கள்.

உலகம் மிகவும் கடினமான இடமாக மாறி இருக்கலாம். எப்போதும் பிரச்னைகளைப்பற்றியே பேசப்படுவதால் மனதளவில் அவர்கள் அதை வாசிப்பதற்கு தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. செய்திகளை தவிர்ப்பதற்காக கூறுபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் உக்ரைன் போரைப் பற்றிய செய்திகளில் இருந்து விலகி இருப்பதாகக் கூறுகிறார்கள். போரின் பாதிப்புகள் அவர்களை கவலைக்குள்ளாக்கி இருக்கலாம்.

அமெரிக்காவில் ஒரு வீட்டில், ஐந்தில் இரண்டு பங்கு மக்கள் தேசிய அரசியலைப் பற்றிய செய்திகளைத் தவிர்ப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் இதில் தெளிவான தீர்மானங்கள் இல்லை. காரணம் சமூக நீதி அரசியல் என சில தெளிவான பதில்கள் கிடைக்கவில்லை என்பது இந்த விஷயத்தில் ஒரு தெளிவான கருத்தியல் முடிவுக்கு வரமுடியவில்லை என்று கூறுகிறார்கள்.

சமீப காலமாகவே வாட்ஸ்அப், டெலிகிராம், முகநூல் போன்ற பக்கங்களிலும் நண்பர்களோடு உரையாடுவது கருத்து பரிமாறிக்கொள்வதும் குறைந்துள்ளது.ஏனெனில் அதன்மீதான் நம்பிக்கையும் குறைந்திருப்பதாக தெரிகிறது. தகவல்களும் தெரியவேண்டும் அவர்களின் ஆரோக்யமும் பாதுகாக்கப்படவேண்டும் என்று விரும்புபவர்களுக்கு ஏதேனும் ஆலோசனை உள்ளதா? சமநிலையை அவர்கள் எவ்வாறு கண்டுபிடிப்பார்கள்?

உலகில் மகிழ்ச்சி, ஆச்சரியம் மற்றும் கண்டுபிடிப்புகள் உள்ளன. அவற்றைக் கண்டுபிடித்து ஆராய்ந்து, வாசகர்களுக்கும் கேட்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வழங்க வேண்டும். அது சரிவிகித உணவு போல இருக்கவேண்டும் என்பதை செய்தி நிறுவனங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

போரிலிருந்து விலகிச் செல்ல முடியாவிட்டாலும், நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்புகிறீர்கள். ஆனால் நீங்கள் அதை எப்போதும் செய்ய முடியாது. சரிவிகித உணவு என்ற பொருளில் இருந்தே நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். எல்லா செய்திகளையும் கொடுக்கவேண்டிய அளவுகோலுடன் கொடுக்கவேண்டும்.

சரிவிகித உணவில் இருந்தே நாம் ஒதுங்கி இருந்துவிட முடியாது. சரிவிகித உணவிலும் ஒரே உணவையும் பரிமாற முடியாது. ஒரே இடத்தில் இருந்து மாற்று உணவுகளையும் தேடவேண்டும். அதுவும் சரிவிகித உணவாக இருக்கவேண்டும். இப்படி கொடுக்கத்  தொடங்கினால் செய்திகள் புறக்கணிக்கப்படாது அல்லது தவிர்க்கப்படாது.

Tags:    

Similar News