இதயத்தை தோளில் சுமக்கும் ஆச்சர்ய பெண்மணி செல்வா ஹுசைனை படிங்க..!

Selwa Hussain-இதயத்தை தன் தோளில் சுமந்து செல்லும் ஆச்சர்ய பெண்மணி லண்டனில் வசித்து வருகிறார்.

Update: 2022-05-27 06:48 GMT

செயற்கை இதயத்தை தோளிலும், மடியிலும் வைத்திருக்கும் செல்வா ஹுசைன்.

Selwa Hussain-செல்வா ஹுசைனுக்கு 39 வயதாக (2017ம் ஆண்டு) இருந்தபோது அவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய். தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, அவருக்கு மோசமான இதயக் கோளாறு ஏற்பட்டது.

செயற்கை இதயம்.

அவர் உயிருடன் இருக்கவேண்டும் என்றால் செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்பதுதான் மருத்துவர்களின் இறுதி முடிவானது. மேற்கு லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 6 மணி நேரம் மிகவும் ஆபத்தான அறுவை சிகிச்சை செல்வா ஹுசைனுக்கு செய்ய வேண்டியிருந்தது. செல்வாவுக்கு முழுமையான செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது.

கணவருடன் செல்வா 

இதயம் இல்லாதவர் என்று இவரை சொல்லலாம். ஆனால், இரக்கமில்லாதவர் என்று சொல்லமுடியாது. பிரிட்டனில் செயற்கை இதயம் மாற்றப்பட்ட இரண்டாவது இதய நோயாளி இவர். இதில் விசேஷம் என்னவென்றால், செயற்கை இதயம் உடலுக்கு வெளியே ஒரு பிளாஸ்டிக் பெட்டியில்தான் உள்ளது. அதன் மேல் இந்த 7 கிலோ பிளாஸ்டிக் பெட்டியை தொங்கவிட்டுத்தான் அவர் வாழ வேண்டும். உட்காரும்போது இதயத்தை மடியில் வைத்துக்கொண்டும், நடக்கும்போது முதுகில் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும்.

உயிர்வாழ்வதை மூன்று வார்த்தைகளில் சுருக்கமாகக் கூறலாம் - 1. ஒருபோதும் கைவிடாதீர்கள்.(இதயத்தை )  2. அது உண்மையில் உங்கள் இதயம். 3. முயற்சி செய்து கொண்டே இருங்கள்(மூச்சுவிடுவதை). செல்வா ஹுசைனுக்கு நாம் நல்வாழ்த்துக்களை சொல்வோம். தற்போது செல்வா ஹுசைனுக்கு 44 வயது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டவராக இருக்கிறார். அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கிழக்கு லண்டன் நகரான இல்போர்டில்(Ilford) கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News