ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய திமிங்கலங்கள்

ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் திமிங்கலங்கள் நூற்றுக்கணக்கில் ஒதுங்கி உள்ளன.

Update: 2024-04-26 13:00 GMT

ஆஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலங்கள்.

ஆஸ்திரேலியாவின் டன்ஸ்பாராக்கில் உள்ள கடற்கரையில் நேற்று திடீரென கூட்டம் கூட்டமாக அரிய வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. சுமார் 160க்கும் மேற்பட்ட பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய நிலையில், அவற்றில் பல உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் வனவிலங்கு ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடலில் வாழும் உயிரினங்களில் மிகவும் முக்கியமான ராட்சத பாலூட்டி இனம் என்றால் அது திமிங்கலங்கள் தான். உலகில் உள்ள விலங்குகளில் மிகப் பெரியது இதுதான். நீரில் வாழும் திமிங்கலத்தில் நீலத் திமிங்கலம் என்பது தான் மிகப் பெரியது ஆகும்.

திமிங்கலங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. ஆஸ்திரேலிய கடற்கரைகளை பொறுத்த வரை அரிய வகை திமிங்கலமான பைலட் திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக வாழுகின்றன. இவை ஆழ்கடலிலேயே பெரும்பாலும் காணப்படுகின்றன. கரைகளுக்கு வருவது மிக அபூர்வமான நிகழ்வாகும். பைலட் வகை திமிங்கலங்கள் ஒரு குழுவாக நீந்தி செல்லும்போது, ஒரு திமிங்கலத்தை பின்தொடர்ந்து அந்த கூட்டத்தை சேர்ந்த மற்ற திமிங்கலங்களும் ஒன்றாக சேர்ந்து பயணிப்பது வழக்கம். நீளத் துடுப்பு பைலட் திமிங்கலங்கள், சிறிய துடுப்பு பைலட் திமிங்கலங்கள் என இரண்டு வகைகள் உள்ளன. ஆண் பைலட் திமிங்கலங்கள் 45 வருடம் வரை உயிர் வாழும். பெண் பைலட் திமிங்கலங்கள் 60 வருடம் வரை உயிர் வாழும்.. அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த பைலட் வகை திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவின் பல்வேறு கடற்பகுதிகளில் காணப்படுகிறது.

ஆனால் இந்த திமிங்கலங்கள் கடந்த இரண்டு வருடங்களாக அடிக்கடி கரை ஒதுங்குகின்றன. அப்படித்தான் ஆஸ்திரேலியாவின் மேற்கு மாகாணத்தின் கடற்கரை நகரமான டன்ஸ்பாராக்கில் நேற்று கூட்டம் கூட்டமாக பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கின.

இதுபற்றி உடனடியாக ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அந்த பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வனவிலங்குநல ஆர்வலர்கள், கடல்சார் உயிரியலாளர்கள் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்கள் வந்து பார்த்த போது, 160 பைலட் திமிங்கலங்கள் கரை ஒதுங்கி இருந்தது தெரியவந்தது. அவற்றில் பல திமிங்கலங்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டனர்.

இதனால் திமிங்கலங்களை உயிருடன் மீட்கும் முயற்சியில் வன ஆர்வலர்கள் இறங்கினார்கள்.பலமணி நேர போராட்டத்திற்கு பின்னர் சுமார் 100-க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை படகு மூலம் ஆழ்கடலுக்கு இழுத்து சென்று விட்டார்கள். ஆனால் 26-க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் செத்து மிதந்தன.இதனால் அவற்றை அங்குள்ள மணல்பரப்பில் குழி தோண்டி புதைத்தனர்.

Tags:    

Similar News