உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவர் விளாடிமிர் புதின்..!

உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-23 07:51 GMT

ரஷ்ய அதிபர் புதின்.

சர்வதேச அளவில் செல்வாக்கு இல்லாத தலைவர் யார்? என கருத்துக்கணிப்பு ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு 18 நாடுகளில் நடத்தப்பட்டது. பியூ ஆராய்ச்சி மையம் நடத்திய இந்த கருத்துக்கணிப்பு ஆய்வின்படி, பல நாடுகளில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மீது பெரும்பான்மையான மக்கள் தங்களது நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தினர்.

மேற்கண்ட ஆய்வு நடத்தப்பட்ட மொத்தம் 90 சதவீத மக்களில் 78 சதவீதம் பேர், உலக விவகாரங்களில் சரியான நடவடிக்கைகளை புதின் மேற்கொள்ளவில்லை என தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர். பொதுவாக, ரஷியா குறித்து எதிர்மறையான கருத்தையே மற்றொரு பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு 85 சதவீதம் பேர் பதிலாக வெளிப்படுத்தினர்.

கடந்த இருபது ஆண்டுகளாக, புதின் மீதான மதிப்பீடு பல நாடுகளில் கீழ்நோக்கிய போக்கில் இருந்தது. அதேசமயத்தில், 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷிய போருக்கு பின்னர், அவர் மீதான மதிப்பு உலக மக்கள் இடையே மேலும் பலமடங்கு சரிந்துள்ளது என்பதே இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்றன.

Tags:    

Similar News