பாகிஸ்தானில் பயங்கரம்: பெஷாவரில் குண்டு வெடித்து 17 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் குண்டு வெடித்து 17 பேர் உயிரிழந்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.

Update: 2023-01-30 10:35 GMT

குண்டு  வெடிப்பு சம்பவம் நடைபெற்ற பெஷாவர் நகரில் உள்ள மசூதி.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் 17 பேர் உயிரிழந்தனர்.

நமது அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள ஒரு மசூதியில் இன்று மதியம் பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு திடீரென சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 17 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.மேலும் 80க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். உலகையே அதிர்ச்சியடைய வைத்திருக்கும் இந்த பயங்கரவாத சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் தற்போது அரசியல் ஸ்திர தன்மையற்ற ஒரு நிலை உள்ளது. ஊழல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரதமராக இருந்த முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இம்ரான் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது இடைக்கால அரசுதான் பதவியில் உள்ளது. அந்நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் அந்நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.


இந்த சூழலில் தான் பாகிஸ்தான் நாட்டு மக்களுக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பு சம்பவம் உலகத் தலைவர்கள் பலரையும் கவலை அடையச் செய்துள்ளது. இந்த குண்டு வெடிப்புக்கு காரணம் என்ன? தீவிரவாத செயல் காரணமா என்பது குறித்து அந் நாட்டு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் குண்டுவெடிப்பில் பலியானவர்களில் பலர் அரசின் முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் என்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டுவெடிப்பில் மசூதியின் ஒரு பகுதி சேதம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News