சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை கொலை செய்ய முயற்சி நடந்ததா?

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை கொலை செய்ய முயற்சி நடந்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது.

Update: 2024-05-07 05:22 GMT

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய கிழக்குப் பகுதியில் உள்ள முக்கியமான நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. இந்தியர்கள் பலரும் சவுதிக்குச் சென்று பல்வேறு வேலைகளைச் செய்து வருகிறார்கள்.

சவுதி அரேபியாவில் நமது நாட்டை போல ஜனநாயக ஆட்சி எல்லாம் இல்லை. அங்கு மன்னராட்சி முறை தான்.. அங்குச் சவுதி மன்னராக அப்துல் அசிஸ் அல் சவுத் இடையே சல்மான் இருக்கிறார். இருப்பினும், அவருக்கு வயதாகிவிட்ட நிலையில், அங்கு இப்போது பெரும்பாலான பணிகளைச் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தான் கவனித்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு சில பகீர் தகவல்கள் வெளியானது. அதாவது சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை கொலை செய்ய முயற்சிகள் நடந்ததாகத் தகவல்கள் வெளியானது. சமூக வலைத்தளங்களில் தான் இந்த தகவல்கள் முதலில் பரவின. இதைச் சவுதி அரசு தரப்பில் யாரும் உறுதி செய்யவில்லை.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் மற்றும் பல உயர் அதிகாரிகள் சென்ற கான்வாய் தலைநகர் ரியாத்தில் தாக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த கான்வாய் செல்லும் போது திடீரென கார் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்ததாகக் கூறப்பட்டது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டானது. அதில் பற்றி எரியும் காருக்கு அருகே போலீசார் பலர் குவிந்து இருக்கிறார்கள். அந்த இடத்தில் கார் கார் குண்டுவெடிப்பு நடந்ததாக சமூக வலைத்தளத்தில் கூறப்பட்டது.

ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேல் போரைச் சவுதி அரேபியா இரண்டாவது முறையாகக் கண்டித்த நிலையில், இந்தத் தாக்குதல் நடந்ததாகத் தகவலும் வெளியானதால் அது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இணையத்தில் பலரும் சவுதி இளவரசர் நலமாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அவருக்கு எதுவும் ஆகியிருக்காது என்று நம்புவதாக எல்லாம் கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

அதேநேரம் சவுதி அரசு இது தொடர்பாக இதை உறுதி செய்யவில்லை. இந்தச் சூழலில் அந்நாட்டைச் சேர்ந்த சில ஊடகங்கள் முகமது பின் சல்மானை குறிவைத்து இதுபோன்ற கொலை முயற்சி சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று கூறுகிறன்றன. சவுதி அரசு இந்த விவகாரம் குறித்து எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை. இதனால் இந்த விவகாரத்தில் இணையத்தில் குழப்பமான ஒரு சூழலே நிலவி வருகிறது. பலரும் சவுதி இது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News