கல்யாணம் ஆகாமலே குழந்தை பெத்துக்கலாம்...,சீன மக்களுக்கு அதிரடி ஆஃபர்

china offer announcement,to be raise population சீனாவில் குறைந்து வரும் மக்கள்தொகையை அதிகப்படுத்த அந்த நாட்டு அரசு விநோதமான ஆஃபரை அறிவித்துள்ளது. கல்யாணமாகாமலேயே குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதே அது.படிங்க...

Update: 2023-01-31 12:02 GMT

சீன அரசு ஒரு குழந்தை என்ற சட்டத்தினை தளர்த்தியதால் ஆச்சர்யத்துடன் பார்க்கும் குழந்தைகள் (கோப்பு படம்)

china offer announcement,to be raise population


china offer announcement,to be raise population

சீனாவில் தான் கொடிய நோயான கொரோனா வைரஸ் தோன்றியது கடந்த 2020ம் ஆண்டில் பலர் உயிரிழந்தனர். தற்போது மீண்டும் இரண்டாவது சுற்றிலும் பலர் இறந்தனர். இதனால் நாளுக்கு நாள் மக்கள் தொகையானது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

இதனை அதிகப்படுத்த ஸ்பெஷல் ஆஃபரை சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாண அரசு மக்களுக்கு தெரிவித்துள்ளது. அதாவது திருமணம் ஆகாதவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்களுக்கு இது ஆஃபராக அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தொகை கணிசமாக உயரலாம் என அந்நாட்டரசு எதிர்பார்க்கிறது.

china offer announcement,to be raise population


china offer announcement,to be raise population

இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவில் மக்கள்தொகையானது சரிந்துள்ளது. இதற்கு கொரோனா பாதிப்பே முக்கிய காரணமாக கூட கொள்ளலாம். கடந்த 60 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவின் மக்கள்தொகையானது கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.

உலகிலேயே அதிக மக்கள் தொகை உள்ள நாடு என பெருமைப்பட்டுக்கொண்டிருந்த சீனாவிற்கு இது பலத்த அடியாகவே அமைந்துள்ளது. இந்த பெயரை இந்தியாவிடம் இழந்துவிட வாய்ப்புள்ளது. கடந்த ஆண்டின் நிலவரப்படி அந்த நாட்டு மக்கள் தொகையானது 141 கோடியாக உள்ளது.

china offer announcement,to be raise population


china offer announcement,to be raise population

இது கடந்த 2021 ம் ஆண்டில் கணக்கிடப்பட்ட மக்கள் தொகையினை விட 8.50 லட்சம் குறைவாகவே உள்ளது. இது இதற்கு முந்தைய ஆண்டில் 1.1 கோடி இருந்திருக்கிறது. 1950 ஆம் ஆண்டிற்கு பின்னர் தற்போதுதான் குழந்தை பிறப்பு விகிதமானது சீனாவில் குறைந்துள்ளது.


china offer announcement,to be raise population

அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் துறையானது இறப்புவிகிதமும் கடந்த ஆண்டில் அதிகரித்துள்ளது. இது வழக்கத்தினை விட அதிகம் என தெரியவருவதால் இந்த அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் திருமணம் ஆனவர்கள் மற்றும் திருமணம் ஆகாதவர்கள் எவ்வளவு குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் திருமணம் ஆகாதவர்களுக்கு பிறந்த குழந்தையும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும் என சீனாவிலுள்ள சிச்சுவான் மாகாண அரசு அறிவித்துள்ளது.

china offer announcement,to be raise population


china offer announcement,to be raise population

3 குழந்தைகள்

ஏற்கனவே மக்கள் தொகையினைக் கட்டுப்படுத்த ஒரே ஒரு குழந்தை திட்டம் அமலில் இருந்து வந்தது. தற்போது இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் இத்திட்டம் தளர்த்தப்பட்டு ஒருவர் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என அந்த நாடு அனுமதி வழங்கியுள்ளது. இதனையொட்டி சிச்சுவான் மாகாணத்தில் இந்த அதிரடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியாக இருந்து மக்கள் தொகை எண்ணிக்கையினை கணிசமாக உயர்த்த முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

Similar News