பிரிட்டனில் எம்.பி. கத்தியால் குத்திக் கொலை
இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த எம்பி, இளைஞர் ஒருவரால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்..
டேவிட் அமெஸ் என்பவர் , கடந்த 1997 முதல் தொடர்ந்து ஏழு முறை சவுத் எண்ட் வெஸ்ட் தொகுதி எம்பியாக இருந்து வருகிறார். நேற்று டேவிட், தன் தொகுதி மக்களை நேரில் சந்தித்து பேசிகொண்டிருந்தபோது, அங்கிருந்த இளைஞர் ஒருவர், டேவிட்டை கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த டேவிட்டை, போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். எனினும் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இதற்கிடையே தாக்குதல் நடத்திய இளைஞரை, போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்லப்பட்ட எம்பி நாடாளுமன்றத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். பொதுவாக, பிரிட்டிஷ் எம்பிக்களுக்கு னாடாளுமன்றத்தில் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு இருக்கும், ஆனால் தொகுதிகளில் அத்தகைய பாதுகாப்பு இல்லை. அமேஸ் தனது இணையதளத்தில் தொகுதி உறுப்பினர்களுடன் தனது சந்திப்பு குறித்த விபரங்களை வெளியிட்டிருந்தார்,