பாகிஸ்தான் திவாலானது எப்படி?

கோதுமைக்காக தனது நாட்டு நிலங்களை விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பாகிஸ்தான்.;

Update: 2024-11-03 06:45 GMT

திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் வெளிநாட்டு டாலர் ரிசர்வ் இரு வாரங்களுக்கு கூட போதுமானதாக இல்லை. அதன் ரூபாய் மதிப்பு 80-லிருந்து 229.78 ஆக வீழ்ந்து விட்டது. பெட்ரோல், டீசல், மின்சாரம் இல்லை. பெட்ரோல் பங்குகள் அடித்து நொறுக்கப்படுவதால் அவை இழுத்து மூடப்படுகின்றன. அதனால் நாட்டின் உற்பத்தி திறன் வேகமாக குறைகிறது. மின்சாரம் இல்லாததால் தெரு விளக்குகள் கூட எரிவதில்லை.

அதன் தாக்கம் "Cascading Effect" ஆக ஒன்றன் பின் ஒன்றாக மூடுகிறார்கள். அதனால் வேலை வாய்ப்புகள் இல்லை. விலைவாசி உச்சத்தை தொடுகிறது. கோதுமை, நெய், எண்ணெய் உச்ச விலையைத் தாண்டிய பின்னரும் கிடைப்பதில்லை. இந்த நிலையில், அடுத்த சில வாரங்களில் எப்போது வேண்டுமானாலும் பாகிஸ்தான் திவாலாகலாம்.

இது பாகிஸ்தானுக்கு மட்டுமா, அடுத்து வீழப்போகும் 108 நாடுகள் இந்த நிலையில் தான் உள்ளன. அதில் ஐரோப்பிய, அரபு நாடுகளும் அடக்கம். இந்தியாவும், சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை அதிகம் இறக்குமதி செய்ய ஆரம்பித்து விட்டன.

அரபு நாடுகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கா விட்டால் இந்தியாவின் நிலை திண்டாட்டமாகி விடும் என்று ஒரு காலத்தில் குரைத்தார்கள். இந்தியா, ரஷ்யாவிடம் குறைந்த விலையில், இந்திய ரூபாயில் வாங்க ஆரம்பித்ததில் அரபுநாடுகளின் ஏற்றுமதி குறைந்து அது மிகப்பெரிய அடியாகி விட்டது. இப்போது "நாங்களும் குறைந்த விலையில் கொடுக்கிறோம்" என்று வரிசையில் நிற்கின்றன அரபு நாடுகள்.

ஆனால் பாகிஸ்தான், ரஷ்யாவிடம் "இந்தியாவிற்கு கொடுப்பது போல எங்களுக்கும் கொடுங்கள்" என்று கேட்டதற்கு முடியாது என்று கூறி பாகிஸ்தானை ஓரங்கட்டியது ரஷ்யா. பாகிஸ்தானுக்கு வேறு வழியே இல்லை, அதை அரபு நாடுகளிடம் கடனாகக் கேட்கிறது. தொப்புள் குடி உறவுகள், "முதலில் பழைய கடனைக் கட்டு, அப்புறம் பார்க்கலாம்" என்கின்றன. 65 ஆண்டுகளில் இல்லாத சரிவு எப்படி கடந்த எட்டே ஆண்டுகளில் வேகமாக நடந்தது? அது எதேச்சையாக நடந்ததா?

"இந்தியாவே இதற்கு காரணம்!" என்று பாகிஸ்தான் அழுகிறது. அதில் உண்மை இல்லாமல் இல்லை. பல நடவடிக்கைகள் அதில் அடங்கும். பாகிஸ்தானின் முக்கிய வருமானம் விவசாயம். அதற்கு அடுத்து Industry, Mining, Service Sector என்று பல வகை மீதம் உள்ளவையாக இருந்தன. அதன் மொத்த வருமானம் GDP $313 Billion ஆக 2018-ல் இருந்தது, $276 Billion ஆக குறைந்தது. அது மேலும் சரிவடைந்து 2020-ல் $263 Billion ஆனது. தற்போது, பெரிதும் கடன் மற்றும் அமெரிக்க, சீனா, அரேபிய நாடுகளின் உதவியையே சார்ந்திருக்கிறது.

மேற்சொன்னவை எல்லாம் நேரடியாக வரும் வருமானங்கள். ஆனால் கடந்த 40 ஆண்டுகளாக பாக்கின் மறைமுக வருமானம் என்பது மிகப்பெரிய அளவில் Counter Feit currency, Drugs smuggling, தீவிரவாதம் மூலம் தான் இருந்தது. ஆஃப்கானிஸ்தானில் ரஷ்யப் படைகள் ஆட்சியில் இருந்த போது அவர்களை எதிர்க்க அமெரிக்கா பாகிஸ்தானை பயன்படுத்தி தலிபான்கள், அல்கொய்தா போன்ற பல இயக்கங்களுக்கு போர்ப்பயிற்சி, ஆயுதங்கள் என பலவற்றை கொடுத்தது.

அதன் மூலம் ஆஃப்கன், பாகிஸ்தானில் இருந்த இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து வந்த அதற்கு, ரஷ்யா ஆஃப்கானை விட்டு வெளியேறியதும் அந்த வருமானம் குறைந்தது. அந்த வேளையில் பாகிஸ்தான் கவனம் காஷ்மீர் பக்கம் திரும்பியது. அதற்கான உதவிகளை அமெரிக்காவிடம் மட்டுமல்லாமல் அரேபிய மற்றும் முஸ்லீம் நாடுகளிடம் இருந்தும் மத ரீதியில் தொடர்ந்து பெற்றது. அதாவது வேலை இல்லாத இளைஞர்களை தீவிரவாதத்தில் ஈடுபடுத்தியது. பாக்கின் ISI, தீவிரவாதிகளின் உதவியோடு போதை மருந்து கடத்தலிலும் பெரியளவில் ஈடுபட்டது.

இங்கே பல முக்கிய நிதியளிப்புகள் நேரடியாக பாக். ராணுவத்திற்கும், அதன் உளவு அமைப்பான ISI அமைப்புக்கும் வந்ததால், அந்த நாட்டு ராணுவம் பாகிஸ்தானின் மக்கள் தேர்ந்தெடுத்த அரசை சாராமல் தன்னிச்சையாக ஆட்சி நடத்தியது. அதை மீறி நடக்கும் ஆட்சிகள் பாகிஸ்தான் ராணுவ அனுமதி, உதவியில்லாமல் நடக்க முடியாது என்ற நிலை உருவானது. அங்கிருக்கும் அரசு அந்த நாட்டின் ராணுவத்திற்கு கட்டுப்பட்டே இருந்தது.

அப்போது அரேபிய, மற்றும் முஸ்லீம் நாடுகள் கொடுத்த பணம் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான தீவிரவாத போராட்டத்தில் இருந்தவர்களுக்கும் உதவ ஆரம்பித்தது. அதன் விளைவாக அதுவரை நிதி கொடுத்த அமெரிக்காவிலேயே இரட்டைக் கோபுர தாக்குதலை நடத்த, அமெரிக்கா வெகுண்டு எழுந்தது. அதன் பின்னர் அமெரிக்காவின் நிதியளிப்பு வெகுவாக குறைந்தாலும் இன்னொரு பக்கம் ஆஃப்கானில் குடிகொண்ட நேட்டோ படைகளுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு ஓரளவிற்கு நிதி கொடுப்பது தொடர்ந்தது.

அதை சரிக்கட்ட பாக்கிற்கு மாற்று என்பது காஷ்மீர் மட்டுமாக இருக்க, அதை வைத்தே முஸ்லீம் நாடுகள் பாகிஸ்தானுக்கு தொடந்து நிதி உதவியளித்தன. அது மட்டுமல்லாமால் இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சிட்டு பாகிஸ்தான் ISI வருமானத்திற்கான ஒரு மாற்று வழியை அதன் மூலம் அடைந்தது. நம் நாட்டின் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க வேண்டுமெனில் அதற்கான மெஷின் தேவை. அதுவும் அந்த நாட்டிற்கு எளிதாக கிடைத்தது.

(இந்த விவகாரம் பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது கவனத்திற்குரியது. இதுவரை இதற்கு யாரும் பதிலளிக்கவில்லை என்பதும் கவனத்திற்குரியது) அடுத்து மிக சிக்கலான விஷயம் ரூபாய் நோட்டு அடிக்கும் பேப்பர்களை வாங்குவது. அதிர்ஷ்டவசமாக, பாகிஸ்தான் தன் நோட்டுக்களை அச்சடிக்க வாங்கிய DeLaRu நிறுவனத்திடம் இருந்துதான் இந்தியாவும் பேப்பர் வாங்கியது என்பதால் அந்த பிரச்சினையும் தீர்ந்தது. அப்புறம் என்ன, இந்திய நோட்டுக்களை அடித்துக் குவித்தது. எனவே அதன் மறைமுக வருமானம் பெருமளவில் உயர்ந்தது.

அது மட்டுமல்ல இந்தியாவிற்கு பஞ்சாப், காஷ்மீர் வழியாக போதைப் பொருட்களை கடத்தி பெரும் வருமானத்தை அதன் ராணுவமும், ISI ஐயும் ஈட்டியது. அது மட்டுமா, தீவிரவாதிகளுக்கு கொடுக்கும் பணமாக இந்திய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து கொடுப்பது என்பது இலவசமாக நடந்தது.

மும்பை துறைமுகத்தில் ஒரு முறை சோதனையின் போது ஒரு கன்டெய்னர் முழுவதும் புதிய ₹500, ₹1000 இந்திய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அது மூன்று கண்டெய்னர்களில் இருந்ததாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதை வெளியே வராமல் அப்போதைய காங்., அரசு மூடி மறைத்தது. இது எந்த அளவிற்கு மிக மோசமான நிலையை தொட்டது என்பதற்கும் பாக்கிஸ்தான் இதன் மூலம் எவ்வளவு ஆதாயம் அடைந்தது என்பதையும் இதன் மூலம் புரிந்து கொள்ளுங்கள்.

2014-ல் இந்தியாவில் ஆட்சி மாறியதும் காஷ்மீரில் கல்லெறி சம்பவங்கள் அதிகரித்தன. அதில் காஷ்மீர் இளைஞர்களும், ரோஹிங்கியா முஸ்லிம்களும் அதிகமாக ஈடுபட்டனர். அதைச் செய்வதற்கு அவர்களுக்கு பெரும்பாலும் புதிய இந்திய ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. அதன் மூலம் பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட கள்ள நோட்டுகள் இந்தியா முழுவதும் புழக்கத்தில் விடப்பட்டது.

அது மட்டுமல்ல, முஸ்லிம்கள் வணிகத்தில் அதிகமாக ஈடுபட்டிருந்ததால் கள்ள நோட்டுக்களை இந்தியா முழுவதும் எளிதாக பரவ விட்டனர். அதனால் சில முஸ்லிம்கள் கடைகளில் பொருட்களை குறைந்த விலையில் கொடுக்க முடிந்தது. எனவே அங்கு கூட்டம் அதிகரிக்க, அதிக வணிகம் நடக்க, அதன் மூலம் கள்ளப்பணத்தை எளிதாக இந்தியா முழுவதும் புழக்கத்தில் விட்டார்கள் என்பதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்தது.

இதை அறிந்த மோடி, அதனைத் தடுக்க வழிகளை ஆராய்ந்தார். இதை ஐ.நா. போன்ற உலக அமைப்புகளிடம் சொன்னால், உலகம் முழுவதும் நம் கரன்ஸியின் மதிப்பு வீழ்ந்து இந்தியாவே திவால் ஆகி விடும். ஏனெனில் பாகிஸ்தானில் அடிக்கப்பட்ட ₹500, ₹1000 நோட்டுக்களின் தரம் ஒரிஜினல் நோட்டுக்களைப் போலவே இருந்தது. அதாவது அதே மெஷின், அதே பேப்பர் எனும்போது தரத்திற்கு என்ன குறைச்சல் ?

அதற்கு மாற்று வழியாக வேறு எதுவுமே இல்லாமல் போக, உதித்த வழிதான் Demonitization. இது மிகவும் சிக்கலான, ஆபத்தான வழியாகும். அதுவரை உலகில் அந்த வழியை நாடிய பல நாடுகளும் அதன் மூலம் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்ததாக இருந்தது தான் அன்றைய வரலாறு. அதில் இந்தியாவிற்கும் மோசமான ஒரு சிறு அனுபவம் இந்திரா காந்தி ஆட்சியில் கிடைத்தது. ஆனாலும் மோடி துணிந்து செய்தார். அதில் வெற்றியும் பெற்றோம்.

அதன்பின், பாகிஸ்தானின் ஒரு முக்கிய வருமானம் அடைபட்டுப் போனது. அதன் விளைவாக காஷ்மீரில் கல்வீச்சு உடனே குறைந்ததே அதற்கு அத்தாட்சி. அடுத்ததாக, பஞ்சாபில் அகாலிதள ஆட்சியில் போதைப் பொருள் கடத்தல் மிக அதிக அளவில் இருந்தது. அதுவும் பாக்கில் இருந்து செயல்படுத்தப்பட்டது. அதை தடுத்ததில் காங்கிரஸ் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங்கும் ஒரு முக்கிய காரணம்.

பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகளை ஊக்குவிக்க பணம் கொடுத்த முக்கிய நாடுகளில் சவூதி அரேபியாவும் ஒன்று. அதனிடம் நாம் பெருமளவில் கச்சா எண்ணெய் வாங்கி வந்தோம். நாம் கொடுக்கும் அந்தப் பணமே பாகிஸ்தான் மூலம் நமக்கு எதிராக தீவிரவாதம் செய்ய பயன்படுத்தப்பட்டது. இந்தியா சவூதியிடம் "இந்த உதவியை நிறுத்துங்கள், இல்லை எனில் உங்களிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விடுவோம்" என்று எச்சரிக்க, ஆடிப்போன சவூதியும், அரபு நாடுகளும் பாகிஸ்தானுக்கு நிதி கொடுப்பதை நிறுத்தின.

இது பாகிஸ்தானுக்கு பேரிடியாக இருந்தது. 2014-ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தானின் மீது போர் தொடுத்தால், சீனாவும், சவூதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக போரில் குதிக்கும் என்ற நிலையில் இருந்தது. இன்று இந்தியாவின் நட்பு நாடாக அரபு நாடுகள் மாறியுள்ளது என்பதில் நம் வெளியுறவு கொள்கையும், அஜித் தோவலின் பங்கும் அளப்பரியது. இது நடந்ததும் பாகிஸ்தான் வருமானம் வெகுவாக குறைய, சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டது.

அப்போது துருக்கியும், மலேசியாவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள். மலேஷியாவின் ஏற்றுமதிகளில் பாமாயில் முக்கியமானது. அதை மிகப்பெரிய அளவில் கொள்முதல் செய்த நாடு இந்தியா. எனவே இந்தியா பாமாயில் இறக்குமதியை மலேசியாவிடம் இருந்து வாங்குவதை நிறுத்தி விட்டு இந்தோனேசியாவிடம் வாங்க ஆரம்பிக்க, ஆடிப்போன, மலேசியா இந்தியாவின் காலில் விழுந்து கதறி மன்னிப்பும் கேட்டது.

இந்தியா மன்னிக்கவில்லை. விளைவு மலேசிய பிரதமர் ஆட்சியில் இருந்து தூக்கியெறியப்பட்டார். உடனே மலேசியா பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்தியது மட்டுமல்லாமல் இந்தியாவோடு போட்டி போடும் அளவிற்கு மலேசியா இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டது.

அடுத்து, துருக்கி பாகிஸ்தானுக்கு உதவுவதன் மூலம் முஸ்லிம் நாடுகளின் தலைவர் ஆகலாம் என நினைத்தது. இந்தியா துருக்கியின் பரம எதிரியான கிரீஸ் நாட்டுடன் உறவை மேம்படுத்தி, அதற்கு பிரம்மோஸ் போன்ற ஏவுகணைகளை கொடுத்து, துருக்கிக்கு எதிராக ஏவுகணைகளை நிறுத்தியது. ஆடிப்போன துருக்கி, இந்தியாவும் எங்கள் நட்பு நாடுதான் என்று இப்போது காலில் விழ ஆரம்பித்துள்ளது.

அத்தோடு உலகம் முழுவதும் உள்ள நாடுகளிடம், பாகிஸ்தானிடம் நீங்கள் உறவு வைத்துக் கொண்டால், இந்தியாவின் வாணிப உறவை இழக்க நேரிடும் என எச்சரிக்க ஒவ்வொரு நாடும் அதன் பாகிஸ்தான் உறவை குறைத்தது.

அது மட்டுமா ? இந்தியா பாகிஸ்தானுக்கு எதிரான பொருளாதார தடைகளை நிறுத்த அதன் ஏற்றுமதி அடி வாங்கியது. வருமானமும் சறுக்கியது. இப்படி பல வகைகளில் அதனைச் சுற்றி வலையைப் பின்னிய இந்தியா, கடைசியில் ஒரு மிகப்பெரும் திட்டத்தை முன்னெடுத்தது. அதாவது, பாகிஸ்தானில் பாயும் நதிகள் பெரும்பாலும் இந்திய இமயமலைப் பகுதிகளில் தோன்றி மேற்கில் பாய்ந்து பாகிஸ்தானுக்கு செல்பவையே. அவற்றில் முக்கியமான சிந்து நதியின் கிளை நதிகளான ஐந்து நதிகள், அனைத்தும் தோன்றுமிடம் இந்தியா தான்.

அதில் இரு நதிகளுக்கு உண்டான நீரை இந்தியாவும், மீதம் உள்ள நீரை பாகிஸ்தானும் பயன்படுத்திக் கொள்வது என்பது ஒப்பந்தம். ஆனால் நாம் இதுவரை பயன் படுத்தாததால் நதிநீர் அனைத்தும் பாகிஸ்தானுக்கே சென்றது. இப்போது பாகிஸ்தானின் உயிர் நாடியான சிந்து நதியிலும், மோடி கை வைத்தார். அங்கேயும் அணை கட்டி எங்களுக்கு உரிய நீரை நாங்கள் எடுத்துக் கொள்ளப் போகிறோம் என்று சொன்னது மட்டுமில்லாமல், அணை கட்ட பணிகளை ஆரம்பித்தார். ஆடிப் போனது பாகிஸ்தான்.

இப்படி பல வகைகளில் உலக நாடுகளில் இருந்து பாகிஸ்தானின் உறவுகளை துண்டித்ததன் விளைவே இன்று பாகிஸ்தான் தனது பிரதமரின் வீட்டை வாடகைக்கு விடும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. இந்த நிலையில் கொரோனாவும், அதற்குப் பின் உக்ரைன் போருமாக மிகப் பெரிய பிரச்சினைகளை உலக நாடுகள் சந்தித்தன.

ஏற்கனவே ஆட்டங்கண்ட பாகிஸ்தான் மேலும் ஊசலாடியது. அந்த நிலையில் இம்ரானின் ஆட்சியும் கவிழ்ந்து ஒரு மைனாரிட்டி ஆட்சி அமைந்து, நாட்டில் எதிர் கட்சிகள் மூலம் கலவரங்கள் மூண்டன. இப்போது பெட்ரோல் டீசல் இல்லை, அதை விலை கொடுத்து வாங்க அரசிடம் டாலர் இல்லை. ஏற்கனவே வாங்கிய கடனுக்கே வட்டி கட்ட முடியாத சூழலில், சீனாவும் கைவிரித்தது.

அதே நேரத்தில் இந்திய மற்றும் ஈரான் ஆதரவு பெற்ற பலுசிஸ்தான் பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதலையும், ராணுவத் தாக்குதலையும் தொடர்ந்து நடத்துகிறது. வடமேற்கில் உள்ள ஆஃப்கன் ஆதரவு பெற்ற படைகளும் பாகிஸ்தானை தாக்க, அதனால் எதுவும் செய்ய முடியாத சூழல். இதற்கிடையில் இந்தியா இரண்டு முறை பாகிஸ்தானில் புகுந்து தாக்கியது. அதனால் எதுவும் செய்ய முடியவில்லை.

இந்தியா ஏவுகணையை வீசி பாகிஸ்தானின் "சீன வான் பாதுகாப்பு ஷீல்ட்" என்பது எதற்கும் உதவாது என நிரூபித்தது. இந்தியாவின் மிக் 29 உளவு விமானம் ஒவ்வொரு மாதமும் அதன் வான் எல்லையை மீறுகிறது. அதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. போர் வந்தால் ஆறு நாட்கள் கூட தாங்காது அதன் ammunition power. இம்ரான்கானே பாகிஸ்தான் மூன்றாக உடையும் என்று சொல்லியிருப்பதில் ஆச்சரியமில்லை.

இது எதுவும் தானாக நடக்கவில்லை. மோடியின் தலைமையில், அஜித் தோவலின் வழியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் மூலம் நடந்தேறியது. இப்போது சொல்லுங்கள் .. அதன் அழிவிற்கு ஆரம்பமான Demonitization என்பது அவசியமா ? இல்லையா ? மோடியின் வலுவான ஆட்சியின் மூலம் நாம் நல்லரசாகவும், வல்லரசாகவும் மாறிக் கொண்டு வருகிறோம்.

நம் வீடு, மொழி, மற்றும் மதத்திற்கும் மேலாக நாட்டை நேசிக்கும் ஒவ்வொருவரும் கைகோர்ப்போம்.சொன்னதைச் செய்வோம் ! உலகத்தை அன்பால் வெல்வோம் !

Tags:    

Similar News