இந்தியா-ரஷ்யா கூட்டணியை வலுப்படுத்தும் ராணுவத்தின் ஜபாத் பயிற்சி

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால கேந்திர ரீதியான கூட்டணியை வலுப்படுத்துவது இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

Update: 2021-09-10 04:53 GMT

ரஷ்யாவின் நிழ்னியில் செப்டம்பர் 4- ஆம் தேதி ஜபாத் பயிற்சி தொடங்கியது. மரபு சார்ந்த போர் சூழலில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாக படைகளுக்கு பயிற்சியளிப்பதே இதன் நோக்கமாகும். இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான நீண்டகால கேந்திர ரீதியான கூட்டணியை வலுப்படுத்தவும், இதில் கலந்து கொள்ளும் நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு, புரிதலை மேம்படுத்துவதும் இந்தப் பயிற்சியின் நோக்கமாகும்.

ரஷ்ய நாட்டின் ராணுவத்தினர் நிகழ்த்திய அணிவகுப்பு மரியாதையுடன் நேற்று தொடங்கிய துவக்க விழாவில், இதில் பங்கேற்கும் நாடுகள் அணிவகுத்து வந்தன.

ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பு துணை அமைச்சரும், ராணுவத் தளபதியுமான ஜெனரல் நிகோலே பன்கோவ், வீரர்கள் இடையே உரையாற்றினார். பயிற்சியின் போது எதிர்த் தாக்குதல் மற்றும் மரபுசார் இயக்கங்கள் சம்பந்தமான முக்கியமான கருத்தரங்கங்கள், அணிவகுப்புகள், செயல்முறைகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும். இந்தப் பயிற்சி செப்டம்பர் 16-ஆம் தேதி நிறைவடைகிறது என்று கூறினார்.

Tags:    

Similar News