சூரிய குடும்பத்தில் அறியப்படாத கிரகம் மறைந்து இருக்கலாம்..! விஞ்ஞானிகள் கணிப்பு..!
நமது சூரிய மண்டலத்தில் புளூட்டோவுக்கு அப்பால் மற்ற கிரகங்களைப் போலவே சூரியனைச் சுற்றி வரும் மற்றொரு கிரகமும் இருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறிவருகின்றனர்.
A mysterious planet in solar system in tamil, A mysterious planet in solar system, solar telescope
சூரியக் குடும்பத்தில் ஒன்பதாவதாக ஒரு கிரகம் மறைந்து இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஆனால், அதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை அல்லது இந்த 'ஒன்பதாவது கோள் ' என்று அழைக்கப்படும், மற்ற கோள்களின் குழுவுக்குள் நமது தொலைநோக்கிகள் மூலம் அது கவனிக்கப்படாமல் இருக்கலாம்.
நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் உள்ளன என்ற வழக்கமான அறிவில் நாம் இருக்கிறோம். புளூட்டோ ஏற்கனவே குள்ள கிரகமாக அறிவிக்கப்பட்டு எட்டு கிரகங்கள் ஆகிவிட்டன. 100 ஆண்டுகளுக்கும் மேலாக, விஞ்ஞானிகள் மேம்பட்ட தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும், சூரிய மண்டலத்தின் எல்லைகளைத் தாண்டிப் பார்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நமது சொந்த சூரிய குடும்பத்தில் இன்னும் பல ரகசியங்கள் உள்ளன என்பதை நாம் மறந்துவிட்டோம். சூரிய குடும்பத்தின் சுற்றுப்புறத்தையே இன்னும் முழுமையாக நாம் கண்டுபிடிக்கவில்லை.
சூரிய குடும்பத்தின் நடுவில் சூரியன் உள்ளது. மற்ற கிரகங்கள் சுற்றி வருகின்றன என்ற கருத்தை விட மிகவும் சிக்கலான நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதில் சிறுகோள்கள், விண்வெளிப் பாறைகள், தூசிப் புள்ளிகள் மற்றும் பல சிதறல்கள் உள்ளன. நாம் 100 சதவீதம் அறிவியல் விஷயங்களை சூரிய மண்டலத்தில் கண்டுபிடித்துவிட்டோம் என்று கூற முடியாது.
நமது சூரிய மண்டலத்தில் புளூட்டோவுக்கு அப்பால் மற்ற கிரகங்களைப் போலவே சூரியனைச் சுற்றி வரும் மற்றொரு கிரகமும் இருப்பதாக விஞ்ஞானிகள் நீண்ட காலமாக கூறிவருகின்றனர். ஆனால் அதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. அல்லது இந்த 'ஒன்பதாவது கோள்' என்று அழைக்கப்படும் அந்த கோளைத் தாண்டி நமது தொலைநோக்கிகளுக்கு அது தென்படாமல் இருக்கலாம்.
ஒன்பதாவது கிரகம் இருப்பதாக விஞ்ஞானிகள் ஏன் நினைக்கிறார்கள்?
புளூட்டோவிற்கு அப்பால் உள்ள விண்வெளிப் பொருள்கள் சூரியனைச் சுற்றி ஒரு நீள்வட்டப் பாதையைக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அவதானித்துள்ளதாகவும், சூரியனைச் சுற்றியுள்ள கிரகங்களின் வரிசையில், அந்த கிரகத்தின் சுழற்சிப் பாதை மற்ற கிரகங்களின் சுழற்சிப் பாதைகளுக்குச் சாய்வாக இருப்பதாகவும், அதனால் அந்த கிரகத்தின் ஈர்ப்புவிசை பாதிக்கப்படுவதால் இது நடக்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அதனால்தான் தொலைநோக்கிகளில் அந்த கிரகம் தென்படவில்லை என்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
ஒன்பதாவது கிரகம் கண்டறிய ஏன் கடினமாக உள்ளது?
சூரியனில் இருந்து நெப்டியூன் இருக்கும் தொலைவைப்போல ஒன்பதாவது கிரகம் இருபது மடங்கு தூரத்தில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நெப்டியூன் சூரியனில் இருந்து 4.47 பில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று கருதும்போது, ஒன்பதாவது கிரகம் இந்த தூரத்தைப்போல 20 மடங்கு அதிகமாக இருக்கும்.
நமது தொலைநோக்கிகள் (விண்வெளி தொலைநோக்கிகள்) ஒரு கோளைக் கண்டுபிடிக்க முயலும்போது, இந்தக் கோள்களின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும் ஒளியைக் கண்டறிவதை நாம் நம்புகிறோம். இன்னும் விளக்கமாக கூறுவதென்றால் ஒரு நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றிவரும்போது நமக்கும் நட்சத்திரத்திற்கும் இடையில் ஒரு வெளிச்சப்புள்ளி மின்னுவதை நாம் காணமுடியும்.
சூரியனிலிருந்து ஒன்பதாவது கிரகம் மிக அதிக தொலைவில் இருப்பதால், அந்த கிரகத்தில் இருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளியைக் கண்டறிவது மிகவும் கடினமாக உள்ளது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.