விருதுநகர் - கண்காணிப்பை தீவிரப்படுத்திய காவல்துறை.

அத்தியாவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை.

Update: 2021-05-15 05:40 GMT

விருதுநகர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி அத்தியாவசியம் இல்லாமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கொரோனோ பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை காய்கறி, மளிகை, இறைச்சி கடைகள் காலை 6 மணிமுதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் இன்று முதல் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் 10 மணிக்கு பின்னர் வெளியே வருபவர்கள் காவல்துறையினர் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மருத்துவ தேவையை தவிர தேவையில்லாமல் வெளியே வந்தால் அவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்வதுடன் அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் அடிக்கடி வரும் வாகனங்களை பறிமுதல் செய்யும் நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்

இதனால் பெரும்பாலான சாலைகள் 10 மணி முதல் வெறிச்சோடி காணப்படுகிறது

Tags:    

Similar News