ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2024-01-04 08:58 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்கப்பட்டு உள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் ராப்பத்து உற்சவம் நிறையொட்டி வரும் 8ம் தேதி முதல், எண்ணெய் காப்பு உற்சவம் தொடங்குகிறது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீஆண்டாள் கோவிலில், மார்கழி மாதத்தின் சிறப்பு நிகழ்ச்சியான ராப்பத்து திருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நம்மாழ்வார் மோட்சமும், அதனை தொடர்ந்து ராப்பத்து சாத்துமுறையும் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீஆண்டாள் - ஸ்ரீரெங்கமன்னார் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீஆண்டாள் கோவிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான எண்ணெய் காப்பு உற்சவம் நிகழ்ச்சி, வரும் 8ம் தேதி (திங்கட் கிழமை) தொடங்கி, 15ம் தேதி வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முத்துராஜா, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராாமராஜா தலைமையில் அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

மார்கழி மாத பூஜைகளை முன்னிட்டு, அதிகாலை கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

தனுர்மாத பூஜையை,  முன்னிட்டு ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு தினசரி காலை சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.   பக்தர்களுக்கு கோவில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் பல திருவிழாக்கள் நடைபெற்றாலும் மார்கழி மாதம் நடைபெறும் இந்த  ராப்பத்து உற்சவம் மற்றும் எண்ணெய் காப்பு உற்சவமும் தான் மிக முக்கியமான விழாக்களாக கருதப்படுவதால் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

Tags:    

Similar News