நகர்ப்புற தேர்தல்: திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக விருப்ப மனு வினியோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம். அமைச்சர் தகவல்.

Update: 2021-11-20 02:06 GMT

பொதுப்பணித்துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலாளருமான எ வ.வேலு.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான விருப்ப மனு வினியோகம் திமுக சார்பில் நடைபெற உள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சரும் மாவட்ட செயலாளருமான எ வ.வேலு  வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தின் திமுக சார்பில் போட்டியிடும் கட்சியினருக்கு நகராட்சி மற்றும் பேரூராட்சி க்கான விருப்ப மனுக்கள் வினியோகம் இன்று முதல் நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணாமலை நகராட்சி , கீழ்பெண்ணாத்தூர் , வேட்டவலம்,  செங்கம், புதுபாளையம் பேரூராட்சிகளுக்கு விருப்ப மனுக்கள் திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கப்படும். திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்திற்கு ஆரணி,  செய்யாறு,  வந்தவாசி நகராட்சிகளுக்கும்  போளூர்,  களம்பூர் ,கண்ணமங்கலம், பெரணமல்லூர், சேத்துப்பட்டு ஆகிய பேரூராட்சி களுக்கும் விருப்ப மனுக்கள் வந்தவாசியில் வழங்கப்படும்.

நகர மன்ற உறுப்பினர் வேட்புமனு கட்டணமாக ரூபாய் 5 ஆயிரம் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் வேட்புமனு கட்டணமாக 2500, ஆதிதிராவிடர் மற்றும் பெண்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகளில் போட்டியிடுவோர் கட்டணத்தில் பாதி தொகை மட்டுமே செலுத்த வேண்டும். போட்டியிட விரும்பும் திமுகவினர் அதற்கு உரிய விண்ணப்ப படிவத்தினை ரூபாய் 10 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். அதனைப் பூர்த்தி செய்து உரிய கட்டணத்துடன் மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News