திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது

Update: 2022-05-06 07:30 GMT

திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பெருவழுதி சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்

வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆங்கில பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

ஆங்கில பேராசிரியர்களுக்கு நடைபெறும் பணியிடை 2 நாள் பயிற்சி வகுப்பினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் சிவப்பிரியா பயிற்சிக்கு வருகை தந்த வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரி பேராசிரியர்களை வரவேற்று பயிற்சியின் அவசியம் குறித்தும் பயிற்சியின் மூலம் பேராசிரியர்களும் மாணவர்களும் பெரும் கல்வியறிவு குறித்தும் பேசினார்.

பயிற்சி வகுப்பில் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பெருவழுதி சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு கிராமப்புற மாணவர்கள் தங்கள் வாழ்வில் மேம்பட அவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த இதுபோன்ற பயிற்சி வகுப்புகள்  நடத்தப்படுகின்றன.   இந்த பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் பேராசிரியர்கள் தங்களையும் மேம்படுத்திக்கொண்டு மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்த வேண்டுமென உரையாற்றினார்.

கல்லூரியின் புள்ளியியல் துறை தலைவர் பாலமுருகன் இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதன் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார்.இறுதியாக கல்லூரி உதவி பேராசிரியை அறிவுச் செல்வி நன்றி கூறினார்.

Tags:    

Similar News