திருவண்ணாமலை: கலைஞர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது

Update: 2022-06-03 13:39 GMT

திருவண்ணமாலை நகர திமுக சார்பில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் இன்று முத்தமிழறிஞர், தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  99 வது பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருவண்ணாமலையில் நடைபெற்ற விழாவில் திருவுடள் தெரு சந்திப்பில் இருந்து அண்ணா சிலை வரை நகர திமுக சார்பில் மாபெரும் ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்தில் மாநில மருத்துவர் அணி துணைத் தலைவ ர் எ. வ. வே. கம்பன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, முன்னாள் நகர மன்ற தலைவரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திக் வேல் மாறன், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்க அமைப்பாளர் ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கம், நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகரமன்ற உறுப்பினர்கள் பொறியாளர் கணேசன், வழக்கறிஞர் சீனிவாசன், பிரகாஷ், குட்டி புகழேந்தி, விஜயராஜ் மற்றும் திரளான திமுகவினர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அண்ணா சாலையில் முடிவுற்றது.

பின்னர் அங்கிருந்த பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. திருவண்ணாமலை 4 வது வார்டில் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமைப்புசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் அதன் அமைப்பாளர் AA. ஆறுமுகம் ஏற்பாட்டில் சிறப்பு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது  இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகர திமுக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கினார்.

போளூர் நகர திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் ராஜேந்திரன், கே.வி சேகரன், நகர செயலாளர் தனசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் சார்பில் போளூர் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், உதவி இயக்குனர் ஜீஜாபாய் செயல் அலுவலர் முகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு போளூர் பேருந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் தூய்மை உறுதி உறுதிமொழி ஏற்றனர்.

சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் நடைபெற்ற விழாவில் மக்கள் இயக்கம் சிறப்பு தூய்மைப்பணி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் சுதா முருகன் தலைமை தாங்கினார்.  பின்னர் அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றனர். ஆரணியில் நகராட்சி சார்பில் என் குப்பை எனது பொறுப்பு திட்டத்தின் கீழ் ஆரணி கோட்டை மைதானத்தில் தூய்மைப்பணி ஆரணி நகர மன்ற தலைவர் ஏ சி மணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவானந்தம், நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு தூய்மைப் பணியை தொடங்கி வைத்தனர். செங்கம் வட்டம் தண்டராம்பட்டு மேற்கு ஒன்றியம் ரெட்டியார்பாளையம் ஊராட்சியில் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ. கிரி, அவர்கள் கழகக் கொடி ஏற்றி கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், ரமேஷ், கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக் பாஷா அவர்கள் தலைமையில் பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் உமா மகேஸ்வரி முன்னிலையில் மக்களின் தூய்மை பணிகள் திட்டத்தை தொடங்கி வைத்து பேரூராட்சி உறுப்பினர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்பு அங்கிருந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள்.

கலசப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி. சரவணன், தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் அன்னதானம் வழங்கப்பட்டது. பின்பு கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழியை ஏற்றனர்.

Tags:    

Similar News