வினாத்தாள் கசிந்த விவகாரம்: 2 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை

வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக 2 தனியார் பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2022-02-15 00:59 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெறவிருந்த திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் கசிந்ததைதையடுத்து, இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வுகள் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 10, 12ஆம் வகுப்பு திருப்புதல் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

வினாத்தாள்கள் வெளியாவதற்கு காரணமாக இருந்த போளூர், வந்தவாசி பகுதிகளை சேர்ந்த இரண்டு தனியார் பள்ளிகள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுத்துறை இயக்குனரின் வழிகாட்டுதலை பின்பற்றி அரசு அதிகாரிகள் மீதும் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே வெளியான அட்டவணையில் எவ்வித மாற்றமின்றி திருப்புதல் தேர்வு நடைபெறும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News