திருவண்ணாமலையில் சாலை பணியாளர்கள் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்கிட கோரி சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-20 12:37 GMT

சாலை பணியாளர்கள் சார்பில்  நடைபெற்ற  போராட்டம் 

திருவண்ணாமலையில் கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கிட கோரி சாலை பணியாளர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை  திண்டிவனம் சாலையிலுள்ள தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் சார்பில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தண்டோரா முழக்கப் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கோட்டதலைவர் முருகன் தலைமை தாங்கினார். கோட்ட பொருளாளா்கள் ராஜகணபதி, சுந்தரம் தாண்டவராயன் ஆகியோர் முன்னிலை வகிக்க, கோட்ட செயலாளர் ஏழுமலை அனைவரையும் வரவேற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டச் செயலாளர்கள் ரமேஷ் சாமிதுரை, எகஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்ற மாநில துணை தலைவர் சிங்கராயன் துவக்க உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட மாநில செயலாளர்கள் மகேந்திரன் செந்தில்நாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைப்பதன் மூலம் 3500 க்கும் மேற்பட்ட சாலை பணியாளர், சாலை ஆய்வாளர் பணியிடங்கள் ஒழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுங்கச்சாவடி அமைத்து சுங்கவரி தனியார் வசூலிக்க அனுமதிக்கக்கூடாது. நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். கிராமப்புற இளைஞர்களுக்கு நெடுஞ்சாலை பராமரிப்பு பணிகளில் வேலை வழங்கிட வேண்டும்.

நெடுஞ்சாலைத்துறையினை மீண்டும் சீரமைப்பு செய்து நிரந்தர பணியிடங்களை ஒழிப்பதா? ஓய்வுபெற்ற ஊழியர்களை கொண்டு பணி மேற்கொள்வதா? இளைஞர்களின் வேலைவாய்ப்பை  பறிப்பதா?  சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5200- 20200-தரஊதியம் ரூ.1900 வழங்கிட வேண்டும். சாலை பணியாளர்களின் முதுநிலை பட்டியலில் தமிழ்நாடு சார்நிலை பணி அமைப்பு சட்டம் 2016 ன்படி முறைப்படுத்தி வெளியிட அனைத்து கோட்ட பொறியாளா்களுக்கும் ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், டிஎன்ஜிஇஏ மாவட்ட தலைவர் பார்த்திபன், மாநிலதலைவர் ராஜா , மாநில துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த போராட்டத்தில் கோட்ட தலைவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகள், சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News