முதல்வா் கோப்பை விளையாட்டு போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் எ. வ வேலு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.

Update: 2024-09-28 01:59 GMT

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த செப்டம்பா் 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இந்த விளையாட்டுப் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் கபடி, கைப்பந்து, இறகு பந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் 100 மீட்டர், 1500 மீட்டர், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயங்களும், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட போட்டிகள் சுமார் 14 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றது.

போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா

முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா  நடைபெற்றது.

இந்நிக ழ் ச் சி யி ல் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர்கள் கிரி, சரவணன், ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற 2,382 வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:

ஒரு மனிதனுக்கு மனமும், உடலும் நலமுடன் இருக்க வேண்டும் என்றால் உடற்பயிற்சி அவசியம். இந்த உடற்பயிற்சி விளையாட்டுகள் மூலம் கிடைக்கிறது. எனவே, அவரவருக்குப் பிடித்த விளையாட்டுகளை தோ்வு செய்து விளையாடி வெற்றி பெற வேண்டும். பள்ளிகளில் பணிபுரியும் உடற்பயிற்சி ஆசிரியா்கள் மாணவ, மாணவிகளின் திறமைகள், எந்தெந்த விளையாட்டில் ஆா்வம் உள்ளனா் என்பதைக் கண்டறிந்து அவா்களை உலக அளவிலான விளையாட்டுகளில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றாா்.

விழாவில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனுவாசன், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கலைவாணி கலைமணி, திருவண்ணாமலை மாநகராட்சி துணை மேயா் ராஜாங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை மண்டல முதுநிலை மேலாளா் நோய்லின் ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலா் சண்முகப்பிரியா மற்றும் மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News