திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு! கலெக்டர் நேரில் ஆய்வு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

Update: 2024-03-02 01:14 GMT

தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் 

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் மார்ச் ஒன்றாம் தேதி முதல் மார்ச் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் டூ தேர்வு தொடங்கியது தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொது தேர்வு நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொது தேர்வுகள் குறித்து மாவட்ட கல்வி அதிகாரி தெரிவிக்கையில்

இத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களும் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 124 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 759 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். 

மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளது இத்தேர்வில் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தில் செய்யாறு கல்வி மாவட்டத்தில் 53 தேர்வு மையங்களும் திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டு மொத்தம் 124 தேர்வு மையங்களில் 27 ஆயிரத்து 649 மாணவ மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

மேற்படி தேர்வு மையங்களில் 132 முதன்மை கண்காணிப்பாளர்கள், 132 துறை அலுவலர்கள் 135 பறக்கும் படையினர் 1624 அறை கண்காணிப்பாளர்கள் 636 சொல்வதை எழுதுபவர்கள் 32 வழித்தட அலுவலர்கள்  5 தொடர்பு அலுவலர்கள் 10 மதிப்பெண் சரிபார்க்கும் அலுவலர்கள் 124 எழுத்தர்கள், மற்றும் 124 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 2932 பேர் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் பேருந்து வசதிகள் உட்பட அனைத்து வசதிகளும் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் தரைத்தளத்திலேயே தேர்வு எழுதவும் போதிய அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்காக சொல்வதை எழுதுபவர்கள் 636 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வுகள் சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய போதிய காவல்துறை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன மேலும் 135 பறக்கும் படை உறுப்பினர்களைக் கொண்ட தேர்வு செம்மையாக நடைபெற்று வருவதை உறுதி செய்யப்படுகிறது, என மாவட்ட கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கல்வித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்

Tags:    

Similar News