திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் அமைச்சர் வேலு ஆலோசனை

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் திருவண்ணாமலையில் அமைச்சர் வேலு ஆலோசனை நடத்தினார்

Update: 2022-01-30 06:47 GMT

கூட்டணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தும் அமைச்சர் வேலு 

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வேட்பாளர்களை இறுதி செய்தல் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்கீடு செய்தல் போன்ற பணியில் திமுக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை திருவண்ணாமலை மாவட்டத்தில் குவித்ததை போல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை வெற்றிகாண தேர்தல் களப் பணிகள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ வ.வேலு தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது.

அதையொட்டி ஒவ்வொரு வார்டுகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் பணிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திமுக ஆட்சியின் சாதனைகள், நலத்திட்டங்களை மக்களிடம் தெரிவித்து அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டு தேர்தல் பணிகளை அமைச்சர் துவக்கி வைத்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் , திருவண்ணாமலை தொகுதி எம்பி அண்ணாதுரை ,சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகராட்சி தலைவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் ,திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News